மார்சிய தத்துவம் ஓர் அறிமுகம்
இந்திய தத்துவ ஞானம் பற்றியும், மார்க்சீய தத்துவம் பற்றியும் மிக விரிவான பல நூல்கள் ஆங்கிலம் வழி தமிழில் கிடைத்தாலும் தமிழில் மூல நூலாக வந்திருப்பன மிகவும் குறைவு. அதிலும் மிகச்சுருக்கமாக, அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் இந்நூல் வந்திருப்பது இதன் சிறப்பம்சம்.
ஐரோப்பிய நவீன தத்துவம் குறிப்பாக ஜெர்மானிய தத்துவம் எவ்வாறு மார்க்ஸ் மூலம் விஞ்ஞானபூர்வ மார்க்சிய தத்துவமாக பரிணமித்தது என்பதையும் தோழர் எஸ்.ஏ.பி. தெளிவாக விளக்கியுள்ளார். அதற்குப் பின்புலமாக அமைந்த டார்வின் போன்ற விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையும் விவரித்துள்ளார்.
இயக்க இயலின் முக்கிய விதிகளையும் உப விதிகளையும் எளிய உதாரணங்களோடு எழுதியுள்ளார். மார்க்சியம் பயில விரும்புவோர் இதை நடைமுறையோடு இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளார்.