அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்:Vasugi Bhaskar
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்:Vasugi Bhaskar
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
கடந்த ஐம்பது வருடங்களில் ஒரளவாகவும் 1900-களுக்குப் பின் தொகுப்புகளாகவும் அம்பேத்கரின் சிந்தனைகள் இங்கு வெளியாகியுள்ளன. அதற்குப் பிறகு அவை பல்வேறு வாசிப்புகளுக்கும் மீளாய்வுக்கும் உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளே மீண்டும் மீண்டும் அம்பேத்கராக முன்னிறுத்தப்படுவதால் அவரின் பரந்துபட்ட தலைப்புகள் பேசுபொருளாவதில்லை. ஆங்கில அறிவுலகில் கெயில் மேம்வெத், ஆனந்த் டெல்டும்டே, கோபால்குரு, அனன்யா வாஜ்பாயி உள்ளிட்டவர்கள் அம்பேத்கரின் பணிகளைப் பகுத்தாய்ந்து அதன் உட்பொருள் குறித்த பார்வையை முன்வைத்திருக்கிறார்கள்.
ஆனால், தமிழ்ச் சூழலைப் பொறுத்த மட்டும் பௌத்தம், இந்து மத விமர்சனம், சாதி ஒழிப்பு என்று குறிப்பிட்ட தலைப்புகளை மட்டுமே தத்தமது அரசியல் நிலைபாடுகளுக்கேற்ற வாசிப்பை மட்டுமே முன்வைக்கின்றனர். மேலும் ஒரு ஆய்வோ எழுத்தையோ வாசிக்கத் தொடங்கும் வாசகர்களுக்கு அந்நூல் கொடுக்கும் புதிய அனுபவத்திற்கு முன் அது பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தைக் கொடுப்பதே முன்னுரைகளின் பொதுவான நோக்கமாகும். பொதுவாக அம்பேத்கரின் அணுகுமுறையை, சிந்திக்கும் முறைமையை நாம் வேறெவரையும் விட அம்பேத்கரிடமிருந்து கற்பதே சரியானது. அதற்கு இத்தொகுப்பு உதவும்.