திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/dravidar-iyakka-paarvayil-bharathiyar
 

இந்நூலாசிரியர் வாலாசா வல்லவன் (செ.சேகர்) வேலூர் மாவட்டம், வாலாசா வட்டம், வை.ச.மோட்டூர் செயராமன்-முனியம்மாள் இணையரின் மகனாக 21.05.1959 இல் பிறந்தார். தொடக்கக் கல்வியை வை.ச.மோட்டூரிலும், உயர்நிலைக் கல்வியை வாலாசாப்பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை மேல் விசாரம் அப்துல் அக்கீம் கல்லூரியிலும் (இளம் அறிவியல் வேதியியல் – B.Sc.Chemistry) பயின்றார்.

பெரியார் சிந்தனைகள் மூன்று தொகுதிகளையும் முழுமையாகப் படித்த பின்னர் 1983 முதல் பெரியார் கொள்கையாளராக மாறினார். தோழர் வே. ஆனைமுத்து அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக 1989 முதல் ‘மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி’யின் முழுநேர ஊழியராகப் பணியாற்றி வருகிறார். தற்போது சென்னை மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் இதழான, ‘சிந்தனையாளன்’ மாத இதழில் பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ‘தமிழன்’, ‘தினப்புரட்சி’ மற்றும் ‘உழைக்கும் மக்கள் தமிழகம்’ ஆகிய ஏடுகளிலும் பல்வேறு கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.  ‘தமிழ்க் குடியரசுப் பதிப்பக’த்தின் மூலம், கவிஞர் கருணானந்தம் எழுதியுள்ள 'பெரியார் வாழ்க்கை வரலாறு’, சி.பி. சிற்றரசு படைப்புகள், ‘புதுவை முரசு’ கட்டுரைகள் தொகுப்பு போன்ற திராவிடர் இயக்கம் தொடர்பான பல நூல்களை மறுபதிப்பு செய்திருக்கிறார்.

 

எழுதியுள்ள நூல்கள்:

  • திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார்
  • கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு
  • மா.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த்தேசியத் தலைவர்களா?
  • திராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்துக்கு தடைக்கல்லா? படிக்கல்லா?

 

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog