பெண்ணினமே
"வரலாற்றுக் காலம் தொட்டே பெண்ணின் இடம் மனித வாழ்வில் முதலிடம் பெற்றே வந்துள்ளது. மனிதரின் நாடோடி வாழ்வில் ஒரு இடத்தில் தங்குவதற்கான அவசியத்தை உருவாக்கியது விவசாயம் என்பதை அறிஞர் பெருமக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த நாடோடி வாழ்க்கையை மாற்றி நிலையான வாழ்க்கையை உருவாக்கிய பெருமை பெண்களையே சாரும் என்கிறார். காரணம் பெண்தான் உலகில் முதல் விவசாயி என்று அய்யப்பன் குறிப்பிடுகிறார்.
பெண்ணியம் குறித்த மிகச் சிறந்த தரவுகளை கொண்ட இந்த நூல், வாசித்துப் பயன்பெற்றந்தைப் போலவே, அனைவரும் வாசித்துப் பயன் பெற வெண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தோழர் அய்யப்பன் அவர்களுக்கு மனது வாழ்த்துக்கள்."
-தோழர் சி.மகேந்திரன்,
"சமூகவியல், மானிடவியல் ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய ஒரு தகவல் களஞ்சியமாகவும் இந்த நூல் அமைந்துள்ளது."
-தோழர் வீ.பழனி
"மேலும் இந்நூலில் பலதாரமணம் என்ற தலைப்பில், ராமாயணம், மகாபாரத கதைகளில் இருந்தும் முஸ்லிம் ஷரியத் சட்டம், திருக்குர்ஆன், சங்க இலக்கியங்கள், காப்பியம் திருக்குறள் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் தெளிவான தகவல்களை திரட்டித் தந்திருப்பது உண்மையில் பாராட்டுக்குரியதே
மொத்தத்தில் இந்நூல் பெண்ணினத்திற்கு பெரும் மாற்றங்களை உருவாக்கும் என்பதில் ஐயம் இல்லை."
முனைவர் ஹ. அல்தாஜ் பேகம்