முதல் பெண்கள்
முதல் பெண்கள்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
கிட்டத்தட்ட 45 'முதல் பெண்களின்' வரலாற்றினை கதை கூறும் பாங்கில் அளித்துள்ள நிவேதிதா லூயிஸ் இந்நூலை ஒரு கலைக்களஞ்சியம் போன்று தொகுத்துள்ளார். இந்த சாதனைப் பெண்களின் அரிய சாதனைகளை ஆவணப்படுத்துதல் மூலம், தேசியம், காந்தியம், சாதியம், வர்க்கம், பாலின பாகுபாடு சார்ந்த குடும்ப வழக்கங்கள் ஆகியன எவ்வாறு ஒவ்வொருவரின் முன்னேற்றத்தையும், சாதனைகளையும் தீர்மானிக்கின்றன என்பதையும் அவர் தெளிவாக விளக்குகிறார். சிறுவயது திருமணம், இளவயதில் விதவை கோலம், இரண்டாம் தாரமாக மணமுடித்து வயது முதிர்ந்த கணவனுக்கு பணிவிடை செய்ய வேண்டிய சூழல், குழந்தைகளின் கல்வி, உடல் நலம் பேணல், கணவனின் வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களுக்கு குடிபெயர வேண்டிய நிலைமை, கூட்டுக் குடும்பங்களில் உற்றார் உறவினருக்கு பணிவிடை செய்ய வேண்டிய கடமை, சாதி சமய கட்டுப்பாடுகள், தடைகள், மணமுறிவு, கலப்புமணம், குடும்பத்தில் ஆதரவின்மை எண்ணற்ற இடையூறுகளுக்கு மத்தியில் இப்பெண்கள் செயல்பட்டனர். பொதுவெளியில் புழங்க வந்தனர். தாம் செயல்பட்ட துறைகளில் தமது திறமைகளை வெளிபடுத்தி செயலாற்றியதன் மூலம் இந்திய தேசியத்துக்கு இவர்கள் தொண்டாற்றினர். இச்செய்திகளை இந்நூல் கவனமாக ஆவணப்படுத்தியுள்ளது.