மேடையில் பேசலாம் வாங்க!
மேடையில் பேசலாம் வாங்க!
ஏறத்தாழ முப்பது ஆண்டுகாலம் மேடைப் பேச்சு என்றால் அஞ்சிகாத தூரம் ஓடியவன் நான். பிறகு ஒரு கட்டத்தில் நானும் மற்றவர்களைப்போல் பேசவேண்டும் என்கிற ஏக்கம், பேரார்வம் காரணமாக தன்முனைப்போடு தட்டுத் தடுமாறி மேடையில் பேச கற்றுக் கொண்டேன். இதற்கு முக்கிய காரணம் விடாமுயற்சியும் முறையான பயிற்சியும் தான். குறுகிய காலத்தில் எனது அபார வளர்ச்சியைக் கண்ட நண்பர்கள் ‘நீ கற்ற வழிமுறைகளை எங்களுக்கும் சொல்லிக் கொடு’ என்று கேட்டபொழுது நாம் ஏன் நம் அனுபவங்களை மற்றவர்கள் பயனுறும் வகையில் எழுதக்கூடாது என்று எண்ணியதன் விளைவாக உதயமானதுதான், மேடையில் பேசலாம் வாங்க! இந்த புத்தகம் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு பேச்சுக் கலையின் நுட்பங்களை அறிந்துக்கொள்ளும் வகையில் பல்வேறு சம்பவங்கள், நகைச்சுவை துணுக்குகள், இவைகளைக் கொண்டு சுவை குன்றாமல் எழுதப்பட்டுள்ளது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.