கதை சொல்லும் கலை
தமிழின் நவீன நாடக வல்லுநர்களுள் ஒருவர் ச. முருகபூபதி. “கதை சொல்லல் என்பது போதனையல்ல; மாறாக நிகழ்த்துதல். குழந்தைகளுக்கான கற்பித்தல் முறைமையின் ஒரு பகுதியாகக் கதைகள் மாற வேண்டும்.
வரலாறு, புவியியல், அறிவியல், கணிதம், தத்துவம், கலாசாரம் என பல்துறை அறிவும் கதைகள் வழியே கற்பித்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாகவும், சுயசிந்தனை உள்ளதாகவும் மனதில் எளிதில் பதியக்கூடியதாகவும் இருக்கும்..’’ என்கிறார் முருகபூபதி. அவர்கள் அறிந்த தாவரங்கள், பறவைகள், மிருகங்கள், என இயற்கையின் படைப்புகளைப் பற்றியக் கதைகள்.
வருடம் தோறும் நிகழும் ஊர்த் திருவிழாக்கள், கோயில் பண்டிகைச் சடங்குககளைப் பற்றியக் கதைகள்.இவ்வாறு இன்னும் சாத்தியமான எல்லாக் கதைகளையும் சேகரிப்பது; வகைப்படுத்துவது; நாடக வடிவங்களின் துணை கொண்டு கதை சொல்லல் முக்கியமானது. பாவைக் கூத்து, பொம்மலாட்டம் மற்றும் பல்வேறு இசைக்கருவிகளின் துணை கொண்டு கதை சொல்லலை பல்வேறு நிலைகளுக்குக் கொண்டு செல்லுவது பற்றி இந்நூல் ஆழமாக விவாதிக்கிறது.