கற்பு கலாச்சாரம்
கற்பு கலாச்சாரம்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ் இலக்கியங்களில் பெரிதும் போற்றப்பட்டு வந்த 'கற்பு' இன்று பெண்ணிய நோக்கில் தெளிவாக மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. வளமான வளர்ச்சிக்கு இத்தகு மறுபரீசீலனைகள், விவாதங்கள் அவசியமாகின்றன. பெண்ணிய பார்வையில் கற்பு' என்ற பெண்ணியவாதிகள் 'கற்பு' என்ற கருத்தாக்கத்தை எவ்வாறு இயல் அணுகி ஆராய்கின்றனர் என்பதையும். அதன்வழி 'கற்பு' எவ்வாறு அடிமைக் கோட்பாடாக உணரப்படுகிறது என்பதையும், எடுத்துரைக்கின்றது. சமுதாயத்தில் இன்று, கற்பு பற்றிய இலக்கியக் (மத) கண்ணோட்டம், சமூகவியல் கண்ணோட்டம், பெண்ணியக் கண்ணோட்டம் என்று பல கண்ணோட்டங்கள் பரவிக்கிடக்கின்றன. இவற்றைச் செவிமடுக்கும் மக்கள், எதை இவர்கள் கண்ணோட்டமாகக் கொண்டுள்ளனர் என்பதை அறிய, அவர்களிடையே 'வினாநிரல்' கொடுத்து வாங்கப்பட்டது. அதில் வந்த முடிவுகள் 'மக்கள் கருத்துக் கணிப்பில் கற்பு' என்ற இயலில் பேசப்படுகிறது. 'கற்பு' என்ற சொல் தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரை பெருவழக்காக வழங்கி வருகிறது. இச்சொல், பதிவிரதா தர்மம், களவுக் கூட்டத்துக்குப்பின் தலைவன், தலைவியை விதிப்படி மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கம், கல்வி. தியாகம். வேலைப்பாடு, சங்கற்பம், ஆணை, கதி என்ற எட்டுப் பொருள்களில் இலக்கியங்களில் கையாளப் பட்டுள்ளதை எடுத்துக்காட்டுடன் விளக்குகிறது தமிழ் லெக்சிகன்.' வின்சலோ தமிழ்-ஆங்கில அகராதியும், கழகத் தமிழ் அகராதியும் 'கற்பு', என்ற சொல்லுக்கு முறைமை, விதி, மதில், நீதிநெறி, கற்பனை என்ற பொருள்களைத் தருகின்றன.? 'கற்பு' என்பதற்கு 'முல்லைக் கொடி' என்ற பொருளைத் தருகிறது இலக்கியச் சொல் அகராதி.3 குசேலாபாக்கியானம் என்ற நூலில் இப்பொருளிலேயே இச்சொல் கையாளப்படுகிறது. இலக்கியங்களில் மேற்கூறியவாறு பல்வேறு பொருள்களில் 'கற்பு' என்ற சொல் கையாளப்பட்டிருந்தாலும், 'ஒழுக்கம்' என்ற பொருண்மையிலேயே பெரும்பான்மையாக எடுத்தாளப்பட்டுள்ளது. இந்த ஆய்வும் 'கற்பு' என்பதை ஓர் ஒழுக்கக் கூறாக மட்டும் எடுத்துக் கொண்டு ஆராய்ந்துள்ளது.