Skip to product information
1 of 2

வசந்தம் வெளியீட்டகம்

காலந்தோறும் பிராமணியம் பாகம் 6

காலந்தோறும் பிராமணியம் பாகம் 6

Regular price Rs. 250.00
Regular price Sale price Rs. 250.00
Sale Sold out
Shipping calculated at checkout.

அருணன் எழுதிய ஆய்வுநூல் தொகுதிகளை அவ்வப்போது பார்த்து, வியந்திருந்தாலும் அதை அவர் சமகாலம் வரையும் நீட்டியிருப்பதுதான் மிக மகிழ்ச்சி தருவதாக உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுக்கால இந்தியாவின் நீண்ட வரலாற்றைச் சமூகவியல் பார்வையில் யாரேனும் தரமாட்டார்களா? (அல்லது நாம்தான் எழுத வேண்டுமோ?) எனும் மயக்கத் தயக்கத்தில் நான் இருந்தபோது இந்த நூல்கள் வந்து பெருமகிழ்வு தந்திருக்கின்றன. இந்த “இந்தியா பற்றிய சமூக ஆய்வு நூல்கள்“ பற்றிய விமர்சனத்தைத் தனியே வைத்துக்கொள்ளலாம். இப்போது மகிழ்ச்சியோடு அறிமுகம் செய்வதையே பெரும் பெருமையாகக் கருதுகிறேன்.

இந்த ஆறாம் பாகம் தற்கால இந்தியாவாக & ஒரே பகுதியாக அமையும் என்று நினைத்திருந்தேன். எழுதப் புகுந்தால் நேரு காலமே ஆறாம் பாகமாகி விட்டது. அவ்வளவு முக்கிய காலமாகவும், அவ்வளவு விஷயங்கள் கிடைத்த காலமாகவும் இருந்தது. சிப்பாய் புரட்சியில் நேருவின் கருத்து என்ன? நிலப்பிரபுத்துவத்தின் சமூக சாரமே பிராமணியம் என்கிறேனே அது ஏன்? ஜான்சிராணி, நானாசாஹிப், தாத்தியாதோப் போன்றோரை பார்ப்பணியம் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? ஆகியவை இந்நூலில் அலசி ஆராயப்பட்டுள்ளன.

இந்தியாவின் மெய்யான சமூக வரலாறு. சாதியம் மற்றும் ஆணாதிக்கத்தின் தோற்றம் - தொடர்ச்சி பற்றிய எத்தனையோ வினாக்களுக்கு விடை கிடைக்கும். தூக்கி நிறுத்தப்பட்ட பொய்மை பிம்பங்களும், இட்டுக்கட்டப்பட்ட மதிப்பீடுகளும் இற்றுவிழும் சத்தத்தைக் கேட்கலாம். கூடவே, மெய்யான சரித்திர நாயகர்களையும் சந்திக்கலாம். நன்கு துடைக்கப்பட்ட இந்தக் காலக் கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது கடந்து போனவை மட்டுமல்லாது நடந்து கொண்டிருப்பவையும் கூடுதல் குறைச்சல் இல்லாமல் தெரியும்.

 

View full details