Skip to product information
1 of 2

பூம்புகார் பதிப்பகம்

கடைசிக் களவு

கடைசிக் களவு

Regular price Rs. 30.00
Regular price Sale price Rs. 30.00
Sale Sold out
Shipping calculated at checkout.

தமிழக இலக்கியக் காலம் இருண்டு கிடந்த நேரம். அப்போது இலக்கிய வானிலே புதியதொரு தாரகை தோன்றி மின்னியது.வாழ்வுக்கு உதவாத வரலாறுகளை - மனிதகுல வளர்ச்சிக்குப் பயன்படாத இதிகாச - புராணக் கதைகளையே படித்துச் சலித்துப் போன தமிழர்களை இருண்ட இலக்கிய உலகிலிருந்து கரையேற்றி, புதிய வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பெருமை அந்தப் புதிய தாரகைக்கே உண்டு.சுடர் விட்டு மின்னிய அந்தத் தாரகைதான் டாக்டர் அண்ணா அவர்கள் ஆவார்கள்.பாண்டவர் வனவாசம், இராமர் பட்டாபிஷேகம், சந்திரமதி புலம்பல், அர்ச்சுனன் தபசு, பவளக்கொடி, ஸ்ரீ வள்ளித் திருமணம் போன்ற மூட நம்பிக்கையை வளர்க்கும் கதைகளுக்கும் நாடகங் களுக்கும் முடிவு கட்ட முத்தான கதைகளையும், நாடகங்களையும் சமுதாயத்துக்கு வழங்கி, மக்களின் மனதில் வேரோடிப் போயிருந்த அறியாமையைக் களைந்தெறிந்த பேராளர் அண்ணா அவர்கள் ஆவார்கள்.'கண்மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக' இதுபோன்ற கருத்துக்களை இராமலிங்க அடிகளார் போன்ற சான்றோரால் சொல்லத்தான் முடிந்தது; அதனைச் செயல்படுத்த அவர்களால் ஏனோ முடியாமற் போயிற்று.ஆனால், அந்தப் புனிதக் கருத்துக்களை நெஞ்சில் நிறுத்தி, சாதிகள், சடங்குகள், சம்பிரதாயங்களில் ஊறிக் கிடந்த தமிழினத்தை தன் அறிவால் - ஆற்றலால் மாற்றி அமைத்தவர் டாக்டர் அண்ணா அவர்கள்தான்.

View full details