இவர்தாம் புரட்சிக்கவிஞர் பார்
இவர்தாம் புரட்சிக்கவிஞர் பார்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
வெண்தாடி வேந்தரின் அரசவைக் கவிஞர் என்றழைத் திடும் வகையில் தந்தை பெரியாரின் கொள்கைகளை முழுமையாய் ஏற்றுப் பாடல்கள் எழுதி புரட்சிக் கவிஞராகத் திகழ்ந்தவர். சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவிஞர் என்று பெரியாரால் பாராட்டப்பெற்ற தனிப்பெருங் கவிஞர். 1931 இல் சென்னையில் நடைபெற்ற நாத்திகள் மாநாட்டில் தம்மை ஒரு நிரந்தர நாத்திகர் என்று எழுதிப் பதிவு செய்து கொண்ட பெருமைக்குச் சொந்தக்காரர் பாரதிதாசன். அவருடைய பாடல்களில் புரட்சிகரமான கருத்துகள் வெள்ளமெனப் பாய்வதையும், நெருப்புச் சிந்தனைகள் கங்குகளாய்ச் சிதற மூடத் தனங்கள் பொசுங்கிச் சாம்பலாவதையும் படிப்போர் உணரமுடியும்.
இருட்டறையில் ஒளிவீசும் ரேடியமாக ஒளிவீசக் கூடியவர் பாவேந்தர். பல்வேறு நிலையில், பல்வேறு தளங்களில் அதனை ஆய்வு செய்து நிறுவும் முயற்சியில் "இவர் தாம் புரட்சிக்கவிஞர் பார்” என்னும் இந்நூல் ஆக்கம் பெற்றுள்ளது.