தலித்துகள்
தலித்துகள்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு வகிக்கும் தலித் மக்கள் குறித்த விரிவான, ஆழமான அறிமுகம் இந்நூல். · சாதி அமைப்பு எப்படித் தோன்றியது? அந்த அமைப்பு எப்படி தலித்துகளை ஒடுக்கியது? · அடிமைமுறை, தீண்டாமை, இனவெறுப்பு ஆகிய மூன்றுக்கும் இடையிலான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் என்னென்ன? · பௌத்தம், சமணம், பக்தி இயக்கம் ஆகியவை சாதி அமைப்பை எவ்வாறு எதிர்த்தன? பண்டைய இந்தியாவிலும், காலனியாதிக்க காலகட்டத்திலும் சுதந்தரத்துக்குப் பிறகும் தலித்துகளின் வாழ்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? · அம்பேத்கரின் வரவு, அவர் முன்னெடுத்த போராட்டங்கள், அவருடைய அரசியல் தலைமை, சாதியமைப்பு குறித்த அவர் ஆய்வுகள், பௌத்த மதமாற்றம் ஆகியவை தலித்துகளிடையே செலுத்திய தாக்கங்கள் எப்படிப்பட்டவை? · அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்களின் இன்றைய நிலை என்ன? பகுஜன் சமாஜ் போன்ற அரசியல் கட்சிகள் சாதித்தவை என்ன, செய்யத் தவறியவை என்ன? நியோலிபரல் அமைப்பு தலித் மக்களின் வாழ்நிலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? · இட ஒதுக்கீடு தலித் மக்களுக்குப் பொருளாதார விடுதலையைப் பெற்றுக்கொடுத்திருக்கிறதா? · தலித்துகள் அரசியல் அதிகாரம் பெற்றவர்களாக இன்று இருக்கிறார்களா? மைய நீரோட்டத்தில் அவர்கள் இணைந்துவிட்டார்களா? · தலித்துகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகள் என்னென்ன? அவர்கள் எதிர்கொண்டு தீர்க்கவேண்டிய சவால்கள் எவை? ஆனந்த் டெல்டும்டேவின் இந்நூல் தலித்துகளின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வரலாறாகவும் அரசியல் போராட்ட ஆவணமாகவும் ஒரே சமயத்தில் திகழ்கிறது
கடந்த ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை மனிதர்கள் என்று குறிப்பிட இயலாத நிலையில் . தீண்டத்தகாதவர்களாக , அணுகத் தகாதவர்களாக , ஏன், பார்க்கவும் தகாதவர்களாக வாழ்ந்திருந்த ஒரு பெரும் மக்கள்திரனை அறிமுகப்படுத்துகிறது இந்த நூல் உலகில் மனிதர்களால் உருவாக்கப்பட்டு நீண்ட காலம் நீடித்திருக்கிற உண்மையான வேறுபாடுகொண்ட சாதிய அமைப்பிற்குப் பலியான வர்கள் அவர்கள் . இன்னும் உலகின் சில பகுதிகளில், சாதி மாதிரியான பிரிவினைகள் காணப்பட்டாலும் , இந்திய நிலைமை வேறு.