அயோத்தி இருண்ட இரவு
அயோத்தி இருண்ட இரவு
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா ஆகிய இரு பத்திரிக்கையாளர்களின் பெருமுயற்சியில் வெளிவந்துள்ள ‘அயோத்தி: இருண்ட இரவு’ என்ற நூல் இந்த உண்மையை உணர்த்தும் உரைகல் எனலாம். பாபர் மசூதிக்குள் ராமன் தோன்றிய ரகசிய வரலாறை சரியாகச் சொன்னால் சதியை, ஒரு புனைவுக்குரிய நீரோட்டத்துடன் நமக்கு உரைக்கும் அதே நேரத்தில் அதோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும், மனிதர்களையும் அரசியல் துணிவோடு அடையாளம் காட்டுகிறது.
இந்துத் தீவிரவாதிகளால் பாபர் மசூதி கைப்பற்றப்பட்ட குற்றச் செயல் குறித்து, அயோத்தி காவல் நிலையத்தில் 23.12.1949 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பின்னர், அந்தக் குற்றவியல் வழக்கு நீதி மன்றத்தில் நடத்தப்பட்ட விதம், 1898 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 145க்கு மட்டுமே உரித்தான மாற்ற முடியாத் தன்மையுடைய சிறப்புக் கூறுகள், வழக்கு விசாரணையின் போது திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்ட விதம், அல்லது அச்சட்டப் பிரிவுக்குப் (145) பொருள் கொள்ளப்பட்ட விதம், ஆகியன, ஒரு விரைவுப் பார்வையில் பார்க்கப் பட்டாலும் கூட, அவை மனத்தில் பதியச் செய்வது ஒரே ஒரு கருத்தை மட்டுமே. அதாவது, பாபர் மசூதி பலியாக்கப்பட்டது இந்து மகா சபையின் அரசியல் கயமைக்கு மட்டுமல்ல, நீதித் துறைக் கயமைக்கும் பலியாகிப் போனது என்ற கருத்தை மட்டுமே.