அருந்ததியர் இயக்க வரலாறு
அருந்ததியர் இயக்க வரலாறு
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
1920ஆம் ஆண்டு தொடங்கி அருந்ததியர் இயக்கத்தின் செயல்பாடுகளை இந்நூல் விவரிக்கிறது. அருந்ததியர் மகாஜன சபை, சென்னை அருந்ததியர் சங்கம் முதன்முதலில் தொடங்கப்பட்டது, கல்வி உரிமை, வாழ்வாதாரம், சமூகநீதியைக் கொள்கையாகக் கொண்டே அருந்ததியர்கள் இயக்கம் செயல்பட்டது, அருந்ததிய மக்களிடையே மண்டிக்கிடந்த தாழ்வுமனப்பான்மையை நீக்கி பகுத்தறிவுச் சிந்தனையையும் வளர்த்தது எனப் பல செய்திகளை இந்நூலில் காணலாம்.
எல்.சி குருசாமி அருந்ததியர் சங்கத் தலைவராக மட்டும் இல்லாமல் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான சமூகநீதியை நிலைநாட்ட எல்.சி.குருசாமியின் பேச்சு நீதிக்கட்சிக்குத் துணைநின்றது.
கவுதம புத்தரின் இனமாகிய சாக்கியர் என்பதே பின்னாளில் சக்கிலியர் ஆனது என்கிற எல்.சி குருசாமியின் வரலாற்று ஆய்வுப் பார்வை அம்பேத்கரை நினைவுபடுத்துகிறது.
கடல்கடந்த இலங்கையிலும் அருந்ததியர் இயக்கம் இயங்கியது. பெ.கா.இளஞ்செழியன், பெரு எழிலழகன் (இந்நூல் ஆசிரியரின் தந்தை) பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கருத்தியலை எப்படி இலங்கையில் நடைமுறைப்படுத்தினார்கள், இலங்கைப் பொதுவுடைமை இயக்கத்தின் போராட்டமும் அதற்கு அருந்ததியர் இயக்கத்தின் ஒத்துழைப்பும். அகில இலங்கை அருந்ததியர் சங்கச் செயல்பாடும் அதன் தலைவராக இருந்த மூ.வேலாயுதம் பணிகளும் எனப் பல செய்திகள் ஆச்சரியமூட்டுகின்றன.