அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நோய்கள்
அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நோய்கள்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
டாக்டர் பூ.பழனியப்பன் தனது மருத்துவப் பட்டப் படிப்பை சென்னை ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியிலும், முதுகலை அறுவை சிகிச்சை பட்டத்தை சென்னை எழும்பூர் மகப்பேறு. மற்றும் பெண்கள் நோயியல் மருத்துவமனையிலும் பெற்றார். இவர் பத்தாண்டு காலத்துக்கும் மேலாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவத் துறைத் தலைவராக மிகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். தமிழ் ஆங்கில மொழிகளில் 100க்கு மேற்பட்ட கட்டுரைகளை யும், பல நூல்களையும் எழுதியுள்ளார். மருத்துவக் கல்வி கற்பிப்பதற்கான பாட நூல்களாக அவற்றில் சில இன்றும் விளங்குகின்றன, மகப்பேறு மருத்துவம் மற்றும் என்டோஸ்கோபி அறுவை சிகிச்சையில் தனது செயல்திறனை விரிவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் எஸ். ரத்தினம் அவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.