அழகர் கோயில் - பேராசிரியர் தொ.பரமசிவன்
அழகர் கோயில் - பேராசிரியர் தொ.பரமசிவன்
‘அழகர் கோயில்’ என்னும் பண்பாட்டாய்வு நூலை, பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் எழுதி வெளியிட்டுள்ளார். மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறையால் வெளியிடப்பட்ட இந்நூல் இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடாகும். துறைவளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1976 – 79 ஆம் ஆண்டுகளில் அழகர் கோயில் குறித்து மேற்கொண்ட கள ஆய்வுகள், ஆய்வேடாகச் சமர்ப்பிக்கப்பட்டது.
பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் (தொ.ப என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்) 70 வயது நிறைவடைந்த பண்பாட்டு ஆய்வறிஞர், எழுத்தாளர், மார்க்சிய பெரியாரியக் கொள்கைகளில் பற்றுடையவர், இளையான்குடி, ஜாகிர் உசேன் கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி, பாளையங்கோட்டை, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மூன்று தசாப்தங்களாக மார்க்சிய-பெரியாரிய அடிப்படையில் வெகுசன வழக்காறுகள், சடங்குகள், நம்பிக்கைகள் சார்ந்த பண்பாட்டாய்வுகளை மேற்கொண்டு வரும் பண்பாட்டாய்வாளர், மண்ணின் வரலாற்றையும், பண்பாட்டின் வரலாற்றையும் இணைத்து கோயில் வரலாற்றாய்வுகளை மேற்கொண்டு வரும் இந்த ஆராய்ச்சியாளர், ஏறக்குறைய 18 ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டவர், பழகுவதற்கு இனிமையானவர், வாசகர்களின் பெருமதிப்பைப் பெற்றவர்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.