
by விழிகள்
தமிழக வரலாற்றில் புரட்சிக்கவிஞர்
Original price
Rs. 0
Original price
Rs. 60.00
-
Original price
Rs. 60.00
Original price
Current price
Rs. 60.00
Rs. 60.00
-
Rs. 60.00
Current price
Rs. 60.00
தமிழக வரலாற்றில் புரட்சிக் கவிஞர் என்ற தலைப்பில் பாவேந்தரைப் பற்றி ஒரு நூல் வெளிவருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் உணர்ச்சி வாய்க்கப் பெற்ற ஒரு பெரிய இளைஞர் கூட்டத்தையே உருவாக்கியவர் பாவேந்தர். அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன் என்று சொன்னால் மிகையாகாது. தமிழ் உணர்ச்சியை ஊட்டியதோடு தமிழ் மேம்பாட்டுச் சிந்தனையையும் என்னுள் உண்டாக்கியவர் பாவேந்தர் என்று சொல்ல வேண்டும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து ஒன்பதிலேயே அவருடன் எந்த அறிமுகமும் இல்லாத நேரத்தில் என்னுடைய கவிதைகளை அவருடைய குயில் இதழில் வெளியிட்டு என் உள்ளத்துக்கு உரமூட்டியவர் பாவேந்தர். அவரைப் பற்றி இரண்டு உரைகளை நிகழ்த்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்துறை எனக்கு வாய்ப்பளித்தது. பேராசிரியர் அன்பழகனாரின் அறக்கட்டளைச் சொற்பொழிவாக இது அமைந்தது பற்றி எனக்கு ஒரு தனி மகிழ்ச்சி.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.