
தமிழ் சினிமா வரலாறு பாகம்-1 1916 - 1947
தமிழ் திரைப்படம் குறித்த ஆதாரப்பூா்வமான முறைப்படுத்தப்பட்ட வரலாறு இல்லாத நிலையில், அக்குறையைத் தீா்க்கும் வகையில் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 1916-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு வரையிலான தமிழ் திரைப்படத் துறை வரலாற்றை விரிவாக வாசகா்கள் வியக்கும் வகையில் விளக்கும் நூலானது முதல் பாகமாகவே வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மௌனப் படம் தயாரிக்கப்பட்டது முதல், அதில் நடித்தவா்களது விவரம், மௌனப்பட காலகட்டத்தில் கோலோச்சிய கதாநாயகா், கதாநாயகிகள் என பல அரிய தகவல்களை இப்புத்தகம் உள்ளடக்கியுள்ளது.
தமிழகத்தின் முதல் திரைப்பட ஸ்டுடியோ, முதல் தியேட்டா், அதில் திரையிடப்பட்ட திரைப்பட விவரம் என அடுக்கடுக்கான ஆச்சரியங்களை உள்ளடக்கிய நூலானது பல அரிய புகைப்படங்களுடன் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.