அம்பேத்கர் வாழ்வில் அறிந்துகொள்ள வேண்டிய சில அம்சங்கள்
அம்பேத்கரின் வாழ்வையும் பணியையும் நாம் எல்லோரும சரியாகப் புரிந்து கொண்டுவிட்டோம் எனச் சொல்ல இயலாது. 14 தொகுதிகளாக மராத்தி மொழியில் இன்று வெளிவந்துள்ள அவரது புதிய வாழ்க்கை வரலாறு பல புதிய செய்திகளைத் தாங்கியுள்ளதாக அறிகிறோம்.ஆங்கிலம் வழியாகக் கசிந்து வந்துள்ள அந்நூல் செய்திகள் ஊடாக அம்பேத்கரை மீண்டும் ஒரு முறை அறிமுகம் செய்கிறார் அ.மார்க்ஸ்.அவரது முந்தைய நூல் தொட்டுக் காட்டிய சில பரிமாணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வேறு சில பரிமாணங்களின் மீது கவனம் குவிக்கிறது இக் குறுநூல். அண்ணல் மறைந்து 60ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. தலித்களின் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்படாதபோதும் உலகம் பெரிதாய் மாறிவிட்டது. புதிய சவால்களை நாம் புதிய வழிமுறைகளோடு எதிர்கொள்ள வேண்டும். அம்பேத்கரின் வாழ்வையும் பணியையும் கூட நாம் புதிய கோணத்திலிருந்து அணுகுவது இதற்கு அவசியமாகிறது.