தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும், திராவிடர் இயக்கத்தைப் பற்றியும் விமர்சித்து ஆதாரமற்ற திரிபுவாதங்களையும், திசை திருப்பல் களையும் திட்டமிட்டு செய்துவரும் திசைமாறியவர்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் மானமிகு கி.தளபதிராஜ் அவர்கள், அவ்வப்போது தக்க பதிலடியை மிகச் சிறப்பாக, நமது கழக ஏடுகளான 'விடுதலை', 'உண்மை ' போன்றவற்றில் எழுதியுள்ளார். அக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த அரிய நூல்!
சிங்கத்தை சிறுநரி என்று கூறினால் அதை நம்புவோர் எப்படிப்பட்டவர்களோ, அந்த வர்க்கத்தினர் தான், பொய்யுடை பலரின் திட்டமிட்ட பொய்ப் பலூனை அவதூறுகளையும் நம்புகின்றனர். உடைக்கும் காற்றடைத்த அந்த பொய்ப் பலூனை ஆதார ஊசியால் குத்தி, ஒன்றுமில்லாததாக்குகிறார் தோழர் தளபதிராஜ் அவர்கள்! - கி.வீரமணி, பாராட்டுகிறோம்! இந்நூல் நிச்சயம் தலைவர், திராவிடர் கழகம் தூங்குகிறவர்களை எழுப்பும்!
'பெரியார் என்ற ஜீவநதி என்றும் ஓடிக்கொண்டே இருக்கும்; அதில் குப்பைகளும், கூளங்களும் வீசி எறியப்பட்டாலும் அதனை அடித்து எங்கோ தள்ளிவிட்டு நதி ஓடிக் கொண்டிருக்கும். குப்பைக் கூளங்களால் நதியின் நீரோட்டத்தை நிறுத்தவா முடியும்?
திராவிடன்குரல்