ராகுல்ஜியின் சுயசரிதை - முகவுரை
முகவுரை
நான் என் "சுயசரிதை”யின் இரண்டாம் பாகமும் முதல் பாகத்துடன் கூடவே 1944 அக்டோபர் மாதத்தில் எழுதித் தந்துவிட்டேன். ஆனால் பல காரணங்களால் அது இப்போது வாசகர்களிடம் சென்று கொண்டிருக்கிறது. இவ்விரண்டாம் பாகத்தை எழுதுவதில் திரு. சத்திய. நாராயண. திவிவேதியின் எழுதுகோல் பெரிதும் உதவி புரிந்துள்ளதால், அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"சுயசரிதை”யின் இந்தப் பாகத்திற்குப் பிறகும் என் வாழ்க்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது நான் மூன்றாம் பாகமும் எழுத வேண்டும். ஆனால் அதற்கு எனது அறுபதாண்டு நிறைவுவரை (1953 ஏப்ரல் 9). காத்திருக்க வேண்டும். வாசகர்கள் குறைபட்டுக்கொள்ளும் வகையில் நான் எழுதுவதை நிறுத்தவில்லை என்பதுண்மை!
நைனிட்டால்
27-4-1950 ராகுல் சாங்கிருத்யாயன்