Skip to content

புனா ஒப்பந்தம் புதைக்கப்பட்ட உண்மைகள் - நூலாசிரியர் முருகு இராசாங்கம் பற்றி...

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/products/punaa-oppantham-puthaikkapatta-unmaigal

 

நூலாசிரியர் முருகு இராசாங்கம் பற்றி...

இவர் தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கவித்தலம் அருகிலுள்ள நக்கம்பாடி என்னும் சிற்றூரில் பிறந்தவர். பிறந்த நாள் 07-05-1944. ஏழை விவசாயக் குடும்பம். குடும்பத்திற்கும் ஊருக்கும் இவரே முதற் பட்டதாரி. பி.எஸ்ஸி.-இயற்பியல். எம்.ஏ.-தமிழ். உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியரகப் பணியாற்றியவர்.

1965இல், பட்டப்படிப்பின் போது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். 1965இல் அனைத்துக் கல்லூரிகளுக்கான பேச்சுப்போட்டியில் முதற்பரிசும், கதைப்போட்டியில் மூன்றாம் பரிசும், கட்டுரைப் போட்டியில் ஐந்தாம் பரிசும் பெற்றவர்.

பெரியார் தலைமையில் இராகுகாலத்தில் இவரது திருமணம் நடந்தது-சாதி மறுப்புத்திருமணம்.

இவரது கவிதைகளும் கட்டுரைகளும் ‘செம்மலர்' மற்றும் 'தாமரை' இதழ்களில் வெளியிடப்பட்டன. முதலாவதாக இவர் தி.மு.க.' விலும், பின்னர் மார்சிஸ்டு கட்சியிலும் ஈடுபாட்டுடனிருந்தார். அடுத்து 'பா.ம.க.' விலும் நாம் தமிழர்' கட்சியிலும் இவர் ஆலோகராக இருந்ததுண்டு.

நூல்கள் படிப்பதே இவரது பழக்கம். இந்நூலை அரிதின் முயன்று எழுதியுள்ளார். ஏற்கனவே முதல் குடியரசு சில பிரச்சினைகள் விமர்சனங்கள்' (1989) பாரதிதாசன் பெற்ற பெற்கிழி' (1993) என்னும் இரு ஆய்வு நூல்களை இவர் எழுதியுள்ளார். புதிய தகவல்களை தக்க சான்றுகளுடன் நிறுவுவார்.

 

- பதிப்பகத்தார்

Back to blog