Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

கடவுள் சந்தை - அறிமுகம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
அறிமுகம்

இந்தியாவில் கடவுளும் உலகமயமாக்கமும்

பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சிலர், துப்பாக்கிகளை ஏந்திய குழுவினர், 2008 நவம்பரில் மும்பை நகரத்தைத் தாக்கிய போது, அவர்கள் ஏன் நம்மை வெறுக் கிறார்கள்?' என்ற கேள்வியைத் தானும் கேட்கும் கணத்திற்கு இந்தியா வர நேரிட்டது. இந்தக் கேள்விக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டின் மீது 9/11 தாக்குதல்களுக்கு ஏறத்தாழ ஜார்ஜ் புஷ் அளித்த விளக்கத்தையே இந்தியர்கள் பலரும் பதிலாக அளித்தனர். இஸ்லாமிய பயங்கரவாதிகள் நம்மை வெறுப்பதற்குக் காரணம், நாம் நல்லவர்கள், அவர்கள் தீயவர்கள்; நாம் சுதந்திரர்கள், ஜனநாயகத்தன்மையுடன் வாழ்பவர்கள், அவர்கள் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தன்மையையும் வெறுப்பவர்கள்.

இந்த 'நாம் - அவர்கள்' பிளவு, உலகமயமாக்கத்துடன் மேலும் தொடர்புடையது. மும்பைத் தாக்குதல்களுக்குப் பிறகு மிகவும் புழக்கத்துக்கு வந்த சொல் அது. உலகப் பொருளாதாரப் போட்டியில் நாம் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம், ஆனால் அவர்கள் முழுத் தோல்வியடைந்த குழுவினர், நமது பொருளாதார அற்புதத்தின் பிரகாச ஒளியை மங்கச் செய்வதற்குக் கங்கணம் பூண்டவர்கள். ஆகவே பாகிஸ்தானியர் நம்மை வெறுக்கிறார்கள்' என்று இந்தியாவில் பலர் வாதிட்டார்கள். உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அழிப்பதற்காக, தகவல் தொழில் நுட்பத்துறை யிலும் பிற தொழில்களிலும் இந்தியாவின் வெளி ஒப்பந்தப் பணியாளர்களைப் பெறுவதைக் குறைப்பதற்காகவும் அயல் நாட்டுச் சுற்றுப் பயணிகள் வராமல் தடுப்பதற்காகவும் செய்யப்பட்ட சதி என்று அந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் நோக்கப்பட்டன.

பொருளாதாரத்தில் மட்டுமல்ல, நாகரிகத்திலும் இந்தியா உலகமயமாக்கல் போட்டியில் வெற்றி பெற்று வருவதாக நோக்கப் படுகிறது. மும்பைத் தாக்குதல்களுக்குச் சற்றுப் பின்னர் த நியூயார்க் டைம்ஸ் இதழில் எழுதிய நன்கறியப்பட்ட அயல் நாட்டுக் கொள்கைத் திறனாளரான ராபர்ட் கப்லான் எழுதினார்:

உலகமயமாக்கல், இந்தியர்களைத் தங்கள் இந்து மதத்தின் உயிர்த்துடிப்பான சுதந்திரமான ஜனநாயகத்தில் வேர்களைத் தேடுமாறு செய்துள்ளது. ஆனால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள முஸ்லிம்கள் உலக இஸ்லாமியச் சமுதாயத்தில் வேர் களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.... தாடிகளுக்குள், வட்டக் குல்லாய்கள், புர்க்காக்களுக்குள் சில சமயம்; சில சமயங்களில் பின்வாங்குகிறார்கள்; பிற நிகழ்வுகளில் தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ளும் சேரிகளுக்குள் ஒதுங்குகிறார்கள்.!

இந்தியாவிலும் இது போன்ற தொரு உணர்வு எதிரொலிக்கப் பட்டது. தமது வலுவான இந்துத்துவ நோக்குகளுக்குப் பெயர் பெற்ற விமரிசகரான எம். வி. காமத், தி ஆர்கனைசரில் எழுதினார்:

அழிக்க முடியாத இந்தியா, மகிழ்ச்சியான புன்முறுவலையும் மன்னிக்கும் முகபாவத்தையும் சுமந்தவாறு, நிலவுக்கு ராக்கெட்டு களைவிட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், அதன் நோய்பிடித்த அண்டை வீட்டுக்காரனும், இந்திய முஸ்லிம்கள் பலரும் வட்டக்குல்லாய்கள் அணிந்தும், பெண்களை புர்க்கா அணியு மாறு கட்டாயப்படுத்தியும், மையநீரோட்டத்தில் மற்றபடி கலந்து கொள்வதை மறுத்தும், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதில் பிடிவாதமாகவும் இருக்கிறார்கள்.

இங்கு ஏதோ ஒரு விசித்திரம் நடந்து கொண்டிருக்கிறது. மெய்யாகவே தங்கள் மரபான உடைக்குள்ளும் மதக் குறியீடு களுக்குள்ளும் பின்னடையும் சில முஸ்லிம்களின் மிகத் தீவிரமான பழமைவாதம், முழு 'உலக இஸ்லாமியச் சமுதாயத்திற்கும்' அடையாளமாக முன்நிறுத்தப்படுகிறது. மாறாக, இந்தியாவின் சாதனைகள் - எல்லா' இந்தியர்களுடையதுமானவை; இந்தியா வின் 'எல்லா மதங்களுக்கும் சமயக் கோட் பாடுகளுக்கும் சொந்த மானவை - இந்து மதத்தின் புகழுக்காகவே முன் நிறுத்தப்படு கின்றன. தனது இந்து நாகரிகத்துடன், இந்தியா, உலகமய மாக்கலின் பிரகாசமான, முன்நோக்கும் முகமாகக் காட்டப் படுகிறது. ஆனால் பாகிஸ்தான், உண்மையில் இஸ்லாம், அதன் இருண்ட, பேய்த்தனமான, பின்நோக்கும் கீழ்ப் பக்கமாகக் காட்டப்படுகிறது. உலகம் இரண்டாகப் பகுக்கப்படுகிறது - உலகப் பொருளாதாரத்தில் விளையாடி வெற்றி பெறுவதற்குத் தேவையான சரியான வகை நாகரிக மூலவளங்களைப் பெற்ற வெற்றியாளர்கள்; மற்றவர்கள், முழு இழப்பாளர்களாக இல்லா விட்டாலும் பின்தங்கியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு