கடவுள் சந்தை
மீரா நந்தா உயிரியலில் தொடக்கப் பயிற்சி பெற்ற தத்துவவாதி. அறிவியல், மதம் குறித்து எழுதி வரும், அறிவியலாளர். இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (டெல்லி) உயிரியல் தொழில்நுட்பத்திலும் ரென்ஸ்சலேர் பாலிடெக்னிக் நிறுவனத்தில் (அமெரிக்கா) அறிவியல் ஆய்விலும் ஆய்வறிஞர் பட்டங்களைப் பெற்றவர். அமெரிக்கன் கவுன்சில் ஆஃப்லேர்ன்ட் சொசைட்டீஸ், அமெரிக்காவிலுள்ள ஜான் டெம்பிள்டன் ஃபவுண்டேஷன் ஆகியவற்றின் ஆய்வு உறுப்பினர். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக உயராய்வு நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியராகவும் (29-21) இருந்துள்ளார். ஃபேசிங் பேக்வேர்ட்: போஸ்ட்மாடர்ன் கிரிடிக்ஸ் ஆஃப் சயின்ஸ் அண்ட் ஹிண்டு நேஷனலிசம் இன் இண்டியா என்னும் விருதுபெற்ற நூலின் ஆசிரியர். தற்போது மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்விக்கான ஆய்வு நிறுவனத்தில் அறிவியல் வரலாற்றையும் தத்துவத்தையும் கற்பிக்கும் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: