இந்த ஆய்வு நூலை எழுதி முடிப்பதற்குத் தேவையான ஆதாரச் செய்திகளையும் தகவல்களையும் பெறுவதற்காக இந்தியப் பண்பாட்டிலும், சமூக வாழ்க்கையிலும் ஆர்வமுள்ள பல நண்பர் களின் உதவியைக் கடந்த இருபது ஆண்டுகளாக ஏதாவது ஒரு வகையில் நாடியுள்ளேன். அவர்கள் அனைவரையும் தனித் தனியாகக் குறிப்பிட்டு எனது நன்றிக் கடனைத் தெரிவிப்பது இயலாத ஒன்று. அவர்கள் தாராள மனத்துடன் பல வழிகளில் எனக்குச் செய்த உதவிகளுக்காக அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நூலின் இறுதிப் பகுதியில், நான் இந்த ஆய்வை எழுதி முடித்துத் தொகுப்பதற்குப் பயன்படுத்திய குறிப்பிட்ட சில நூல்களின் பட்டியலையும், முக்கியமான பதிப்பகங்களின் பெயர் களையும் கொடுத்துள்ளேன். இந்த நூல்களில் பெரும்பாலானவை வைதீக இந்து அறிஞர்களால் நிறுவப்பட்டு, நடத்தப்பட்டு வரும் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான பாரதிய வித்தியா பவனைச் சார்ந்தவை. அவர்கள் இந்திய வரலாறு, அரசியல், தத்துவம், மதம், பண்பாடு இன்ன பிற துறைகளிலும் நூல்களும் இதழ்களும் வெளி யிட்டு வருகிறார்கள். துணைத் தகவல்களுக்காக வேறு இடங்களி லிருந்து நான் செய்திகளைப் பெற்றிருக்க முடியும் என்றாலும், பவன் வெளியிட்ட நூல்களைச் சார்ந்து இருப்பதற்கே பெரும் பாலும் விரும்பினேன். ஏனெனில் எனது நூலில் நான் நிறுவ இருந்த கருத்தியல்களுக்கு, வைதீகர்களின் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறாக எழுதப்பட்ட நூல்களின் சான்றாதாரங்களைவிட பவன் வெளியீடுகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் பகுத்துணரும் வாசகர்களின் மதிப்பீட்டுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்று முடிவு செய்தேன்.
வித்தியாபவன் ஒன்பது தொகுதிகளாக வெளியிட்ட 'இந்திய மக்களின் வரலாறும் பண்பாடும்' என்ற தொகுப்பிலிருந்து அடிக்கடி மேற்கோள் காட்டியுள்ளேன். இந்து தேசியவாதிகளின் வட்டாரங்களில் மிக உயர்வாக மதிக்கப்படும் இந்தச் சிறப்பு மிக்க நூலைக் காங்கிரஸ் அரசும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண் டுள்ளது. இந்நூல் கல்வி நிலையங்களில் பாடப்புத்தகமாகப் பயன் படும் பொருட்டுப் பல வட்டாரமொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. எனது ஆய்வுக்குத் தேவைப்பட்ட வரலாற்றுச் செய்திகளுக்கு இந்தத் தொகுப்பையே நான் முக்கியமாகச் சார்ந்தி ருந்தது மிகப் பொருத்தமானதே.
பவன் வெளியீடுகளை நான் அதிகமாகச் சார்ந்திருந்ததற்காக மட்டுமல்லாமல் பாரதிய வித்தியா பவன் எனக்குச் செய்த பிற உதவிகளுக்காகவும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் மேற்கோள்களுக்காகப் பயன்படுத்திய வேறு பல ஆசிரியர் களின் நூல்களுக்காகவும் அந்த ஆசிரியர்களுக்கு நான் கடமைப் பட்டுள்ளேன். பயன்பட்ட நூல் பட்டியலில் அவை இடம் பெற்றிருக்கின்றன.
எனது எழுத்துப் படியை வாசித்து, விமரிசித்து, தவறுகளைத் திருத்தி என்னை ஊக்கப்படுத்திய நண்பர்களான எம். ஆர். ஏ. பெய்க், வி.ஆர். நர்லா, ஆர்.எல். நிகாம் ஆகியோரைக் குறிப்பிடா விட்டால் நான் நன்றி மறந்தவனாகிவிடுவேன். அவர்களுடைய ஆலோசனைகளும் குறிப்புரைகளும் எனக்கு உதவிகரமாக இருந்ததோடு இந்த நூலைச் சிறப்புள்ளதாகச் செய்யவும் பயன் பட்டன. இந்தியப் பண்பாடு, வரலாறு, அரசியல் ஆகியவை பற்றிய எனது அணுகுமுறைக்கு இந்த நண்பர்களது குறிப்புரைகள் பயனுள்ளதாக இருந்தது. ஆயினும் இந்நூலில் வெளிப்பட்டி ருக்கும் கருத்துக்கள் யாவற்றிற்கும் நானே பொறுப்பாளன் என்பதே உண்மை. நான் இந்த நூலில் கூறியிருக்கும் கருத்துக்களில் அந்த நண்பர்களுக்கு முழு உடன்பாடு இருந்ததில்லை.
இறுதியாக, கையெழுத்துப் படியை மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்து, பதிப்பிற்குத் தயராகும் விதமாகக் கவனமுடன் செய்து முடித்த செல்வி எம். கே. அன்னம்மா, செல்வி எஸ். பாத்ரா ஆகியோருக்கும் நன்றி கூறுகிறேன்.
பிரேம்நாத் பசாஸ்