புத்தரும் அவர் தம்மமும் - முகப்புரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/butharum-avar-dhamma 
முகப்புரை
காலகாலமாய், மக்கள் தம் காலத்தில் நிலவி வருவனவும், பாரம் பரியமாய் அடையப் பெற்றனவும் ஆன நம்பிக்கைகள், கருத்துக்கள் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்யத் தாமாகவே நிர்ப்பந்திக்கப்படு கிறார்கள். தமது காலத்துக்கும் கடந்த காலத்துக்குமான அனுபவங் களுக்கிடையே ஓர் ஒருமையை ஏற்படுத்தவும், உணர்வு, சிந்தனை ஆகியவற்றின் தேவைகளைத் தீர்க்கவும், எதிர் காலத்தை நம்பிக்கை யுடன் எதிர் கொள்ளவுமானதாய் உள்ளன இந்த நிர்பந்தங்கள்.

தற்காலத்தில், சமயம் என்பது விமர்சனத்திற்கும் விஞ்ஞான ஆய்விற்கும் நடைமுறை வகையிலும், கோட்பாட்டு வகையிலும் உட்படுத்தப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்நிர்ப்பந்தங்கள் கீழ்க்கண்ட சூழல்களின் விளைவாயுள்ளன: அவையாவன:

(அ) விஞ்ஞான அறிவு, சிந்தனை ஆகியவற்றின் விரைவான முன்னேற்றம்;

(ஆ) இவைகளைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆழ்ந்த அறிவு பூர்வமான ஈடுபாடு;

(இ) உலகம் முழுவதும் பரவியுள்ள மதங்களைப் புனரமைப்பு செய்யவும், மேலும் அதிக 'பகுத்தறிவோடும்' 'விஞ்ஞானத் தோடும்', 'குறைந்த மூடநம்பிக்கையோடும்' உள்ளனவாக மாற்றியமைக்கவும் தோன்றி உள்ள ஒரு புதிய போக்கு

(ஈ) கடந்த காலத்தில் சமூக, அரசியல், சர்வதேச நிகழ்வுகளில் மதங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் - மற்றும் மதங்களின் மீது சமூக, அரசியல், சர்வதேச நிகழ்வுகள் ஏற்படுத்திய தாக்கங்கள் - அவற்றின் விளைவுகள். எப்போதெல்லாம் மனித செயற்பாடுகளின் ஒழுக்க, நன்னெறி முறை மதிப்பீடுகள் அல்லது சூழல்கள் விவாதத்திற்கு உட்படுத்தப் படுகின்றனவோ, மதங்களைப் பற்றிய மதிப்பீடுகள் கணக்கி லெடுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம், அவைகளின் மிகவும் அடிப்படையான கருத்துக்களை - சமூகத்தில் அவை ஏற்படுத்தும் ஆழமான சலனத்தை-அவற்றின் விளைவுகளை ஒட்டுமொத்தமாக மறுபரிசீலனையை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது - அவைகள் மதச் சார்புடையவை அல்லவாயினும்.

மொத்தத்தில், நீதி, மனிதவிதி, கடமை, பிரபஞ்சம் ஆகியவற்றின் பிரச்சினைகளை இவை எழுப்புகின்றன - இவற்றைத் தொடர்ந்து இவை 'மதம் சார்ந்த மற்றும் அவையல்லாத' கருத்துக்களுக்கிடை யிலுள்ள பிரச்சினைகளையும், சாதாரண அறிவின் மதிப்பீடு, 'அனுபவம்' 'மெய்ம்மை ' ஆகிய கோட்பாடுகளின் நடைமுறையையும் உட்படுத்துகின்றன.

(என்சைக்ளோபீடியா ஆப் ரெலிஜன் அண்ட் எதிக்ஸ், வால்யூம் 10, பக்கம் 669)

Back to blog