ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? - பொருளடக்கத்தின் உள்ளடக்கம்

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/aathikka-sathigalugkku-mattume-avar-periyaraa
 
பொருளடக்கத்தின் உள்ளடக்கம்

1.ஜாக்கெட்டும் ஜாதியும்:

பெரியாரின் வரலாற்றைப் படிக்காமல், அவர் எழுத்தை பேச்சை உள்வாங்கிக் கொள்ளாமல் செய்யப்படும் அவதூறு விமர்சனங்களுக்கான தேவை எதில் இருந்து வருகிறது? 'பறையர் இனப்பெண்கள் ரவிக்கை கட்ட ஆரம்பித்ததால் துணிவிலை அதிகமானது' என்று சொன்னாரா பெரியார்?

2.ஏன் இந்த வேண்டாத வேலை?

பெரியார் குறித்து தலித் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் இதுவரை சொல்லி வரும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள், அவதூறுகளின் சாராம்சம்.

3.நான் யார்?

பெரியாரைப் பற்றி யாரும் புதிதாக எழுதத் தேவையில்லை. அவரே அவரைப் பற்றி எல்லா நிறைகுறைகளையும் சொல்லி இருக்கிறார். அதாவது, தன்னைப் பற்றி அவர் சொன்னதன் தொகுப்பு

4.பட்டியல் இனமும் தீண்டாமையும்

பிற்படுத்தப்பட்டவர்களுக்காக மட்டுமே அவர் பேசினார் என்றால் இவை எல்லாம் யாருக்காகப் பேசியது?

5.சாதி இந்துக்களைச் சாடியது.

சாதி இந்துக்களைப் பெரியார் சாடியதே இல்லை என்பவர்கள் கண்ணுக்கு இதெல்லாம் தெரியாமல் போனது ஏன்?

6.பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே பேசினாரா?

பெரியாரின் உரைகள் அனைத்திலும் ஆதி திராவிடர், பறையர், பள்ளர், தாழ்த்தப்பட்டோர், ஐந்தாம் சாதிகள் என்ற சொற்கள் நிச்சயம் இருந்துள்ளன.

7.பெரியாரின் முயற்சியும் எம்.சி. ராஜா செலுத்திய நன்றியும்

நீதிக்கட்சி அமைச்சரவையில் பட்டியல் இனத்தவரை அமைச்சராக்க பெரியார் எடுத்த முயற்சிகள் குறித்து எம்.சி. ராஜா அளித்த நேரடி வாக்குமூலம் என்ன தெரியுமா?

8.தீர்மானங்கள் போடவே இல்லையா?

1929 செங்கல்பட்டு மாநாட்டில் தீண்டாமைக்கு எதிராகத் தீர்மானம் போட்ட பிறகு அதைத் தொடரவில்லை என்கிறார்கள். ஒவ்வொரு மாநாட்டிலும் என்னென்ன தீர்மானங்கள் பட்டியலின மக்களுக்கு ஆதரவான குரலாக ஒலித்தது என்பதன் தொகுப்பு.

9.அயோத்திதாசர் புகழை மறைத்தாரா?

அயோத்திதாசர் மீது பொறாமைப்பட்டார் பெரியார், அவரது புத்தகங்களை காப்பி அடித்தார், அவர் புகழை மறைத்தார் என்பது குற்றச்சாட்டு. தனக்கு வழிகாட்டி என்று அயோத்திதாசரைத்தான் பெரியார் சொன்னார். மதம் அற்ற பெரியார் புத்த மதக்கூறுகள், வழிபாடுகள், பண்டிகைகளை ஏற்றுக்கொண்ட அயோத்திதாசரை முழுமையாக எப்படி ஏற்க முடியும்?

10.பெரியாரின் தலைவர் பி.ஆர். அம்பேத்கர்

தமிழகத்தினுள் அம்பேத்கரைக் கொண்டு வந்து சேர்த்த பெரியார், அவரைத்தான் தனது தலைவர் என்றார். தான் வாழ்ந்த காலத்தில் பெரியார் ஏற்றுக்கொண்ட ஒரே மனிதர் அம்பேத்கர் மட்டும் தான்.

11.தமிழக தலித் தலைவர்களை இருட்டடிப்பு செய்தாரா?

எம்.சி. ராஜா, இரட்டைமலை சீனிவாசன், என்.சிவராஜ், சகஜானந்தா குறித்து பெரியார் பெருமையாக சொன்னது என்ன?

12.வைக்கம் போராட்டம் யாருக்கானது?
அத்தோடு முடிந்தாரா பெரியார்?

அம்பேத்கருக்கு தூண்டுதலாக இருந்த வைக்கம் போராட்டம், தீண்டாதார் அனைவருக்குமான வாசலை திருவிதாங்கூரில் திறந்தது. வைக்கம், சுசீந்திரம் மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் நடந்த தீண்டாமை வன்கொடுமைகளில் யார் பக்கம் நின்றார் பெரியார்?

13.பட்டியல் இனத்தவருக்கு காட்டிய பாதை

பார்ப்பனர் இடத்தில் பார்ப்பனர் அல்லாதாரை கொண்டு வந்து உட்கார வைக்கவே உழைத்தவர் என்று குற்றம் சாட்டுபவர்கள் இதை வாசிக்க வேண்டும். குறிப்பிட்ட சாதிகள், தங்களது சாதி ரீதியான வேலைகளைப் பார்க்கக் கூடாது என்றும் அதிகாரம் பொருந்திய என்னென்ன வேலைகள் அவர்களுக்குத் தர வேண்டும் என்றும் பெரியார் சொன்னதன் தொகுப்பு

14.கீழ்வெண்மணியும் விவசாயத் தொழிலாளர் கழகமும்

இந்த நாட்டு சட்டத்தால், நீதிமன்றத்தால் கீழ்வெண்மணி போன்ற வன்முறைகளைத் தடுக்க முடியாது என்றவர் பெரியார். அது கோபாலகிருஷ்ண நாயுடு கொலையில் முடிந்தது வரையிலான நிகழ்வுகள்.

15.முதுகுளத்தூர் கலவரமும் கடைசியாய் வாங்கிய கல்லடியும்

முதுகுளத்தூர் கலவரத்தை மற்றவர்கள் அனைவரும் அரசியலாக பார்த்தபோது சாதி வன்கொடுமையாக பார்த்த ஒரே தலைவர் பெரியார். அந்தக் காலகட்டத்து பதிவுகள் அனைத்தையும் பார்த்தால் இது புரியும். இறுதிக்காலத்தில் மதுரையில் அவர் மீது விழுந்த கல், சாதி இந்துக்கள் வீசியதுதான்.

16.யாருக்கான பெரியார்?

என்னைச் சூத்திரன் என்று சொல்வதை விட பஞ்சமன் என்று சொல்வதையே பெருமையாக நினைக்கிறேன் என்று சொன்னவர் பெரியார், பஞ்சம் மனோபாவத்தில் தான் பேசினார். எழுதினார். செயல்பட்டார். வாழ்ந்தார்.

Back to blog