ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?
ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
"தீண்டாதாரின் முன்னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும்" என்று சுயமரியாதை இயக்கம் தொடங்கியது (1925) முதல்..... இவ்வலகில் இருந்து விடைபெறுவதற்கு ஒரு மாதம் முன்பு மதுரையில் ஆதிக்க சாதி மனோபாவத்தைக் கண்டித்துப் பேசியதற்காக கல்வீச்சுத் தாக்குதலுக்கு (1973 அக்டோபர் 20) ஆளானது வரை.... தந்தை பெரியார் பேசியது, எழுதியது, செயல்பட்டது அனைத்தும், எல்லாத் தமிழ் மக்களுக்குமே. அதை உணராமல், அவரைப் படிக்காமலேயே, 'ஈ.வெ.ரா. தலித் விரோதி, ஆதிக்க சாதிகளுக்கான பெரியார்' என நிறுவ முயற்சிக்கும் அபத்த களஞ்சியங்களுக்கான பதில்தான் இந்த நூல். குடி அரசு, விடுதலை இதழ்களின் 75 ஆண்டு பதிவுகளையே ஆதாரமாகக் கொண்டு இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. ஈரோட்டுக் கண்ணாடி மூலமாக இருபதாம் நூற்றாண்டுச் சமூக நிலையைக் காட்டும் புத்தகம் இது!