ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? - இவர்கள் இல்லாமல் இந்தப் புத்தகம் இல்லை !
புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/aathikka-sathigalugkku-mattume-avar-periyaraa
இவர்கள் இல்லாமல்
இந்தப் புத்தகம் இல்லை !
பெரியாரைச் 'சும்மா' படித்துக் கொண்டிருந்தவன் நான். அதைப் பொருளோடு’ படிக்கத் தூண்டியவர்கள் பெரியாரியத்தின் எதிரிகளல்ல. பெரியாரியத்தின் நட்பு சக்திகளாக இருந்திருக்க வேண்டிய தலித்திய ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள்.
தி.பெ.கமலநாதன், அன்பு பொன்னோவியம், ரவிகுமார், சிவகாமி, ஸ்டாலின் ராஜாங்கம், மா.வேலுசாமி, பூவிழியன், கௌதம சன்னா, அ.ஜெகநாதன் உள்ளிட்டோர் பெரியார் குறித்து எதிர்மறையாய் எழுதாமல் போயிருந்தால் பெரியாரை 'சும்மா' படித்துக் கொண்டு நானும் இருந்திருக்கலாம். இவர்களின் எழுத்துக்களைப் படித்த பிறகு, அதற்குப் பதில் தேடி பெரியாரியத்துக்குள் போன போதுதான் உண்மையான பெரியாரை உணர முடிந்தது. இவர்கள் எழுதியிருக்காவிட்டால் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்காது.
இவர்களது கட்டுரைகள், புத்தகங்கள் வெளியானதும் அதற்கான பதில் தேடுதல் தொடங்கியது. பெரியார் திடல் நூலகமே அனைத்துக் கேள்விகளுக்கும் விடை தரும் கருவூலமாக அமைந்தது. பெரியார் தனது மொத்த அறிவையும் கட்டுரைகளாக, வெளியீடுகளாக, புத்தகங்களாகத் தந்து சென்றார். அவை மொத்தமும் பெரியார் திடலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பெரியாருக்குப் பின் இயக்கத்தை மட்டுமல்ல, இந்த அறிவுக்கருவூலத்தையும் காத்து வரும்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், நூலகர் கோவிந்தன் ஆகியோருக்கு நன்றிகள். எங்களை எல்லாம் கவலையில் ஆழ்த்திவிட்டுப் பிரிந்து சென்ற என் நண்பன் பெரியார் சாக்ரடீஸ்க்கு என்ன சொல்வது? இந்தப் புத்தகம் தான் அஞ்சலியாக அமைய முடியும். நினைவில் வாழும் சின்னக்குத்தூசியும், சோலையும், 'தாயகம்' விருத்தாசலம் செ. ராசுவும், வீர. சந்தானமும் வணங்கத் தக்கவர்கள்.
அறிவாலயம் பெரியார் திடல் நூலகம் போலவே அண்ணா நூலகமும் தரவுகளின் மையமாக இருந்தது. நூலகராக இருந்த சுந்தர்ராஜன், இப்போதைய நூலகர் பத்மநாபன் ஆகியோர் செய்த உதவிகள் மறக்க முடியாதது. ஒரு புத்தகம், ஒரு பக்கம் எங்கேயோ இருப்பதைத் தேடி எடுத்துக் கொண்டுவந்து கொடுத்த, என்னால் தொடர்ந்து கடந்த பல ஆண்டுகளாகத் துன்புறுத்தப்பட்ட மனித உயிர்கள் ஏராளம்.
தமிழ் உணர்வையும் உணர்ச்சியையும் என்னுள் ஊட்டிய பெற்றோர் பெரும்புலவர் மு.படிக்கராமு - முத்துலக்குமி இணையர்க்கும், என் எழுத்துப் பணிக்கு ஆக்கமாகவும் ஊக்கமாகவும் வாழ்க்கையை அமைத்துத்தந்த என் மனைவி ரேணுகா, இரண்டு மகள்களுக்கும் அன்பு. இவர்கள் எனது கொடை.
பள்ளிக் காலம் முதல் என்னோடு பயணிக்கும் இரா.விஜய வேலவன், கா.திருமாவளவன், முனியசாமி, கல்லூரிக் காலம் முதல் தோள்கொடுத்த சு.குமாரதேவன், சி.தங்கவேல், மதுரை விஜயகுமார் ஆகியோரும்.
எனக்கு தங்களது இரு கரங்களையும் பல ஆண்டுகளாக தாரை வார்த்துவிட்ட உடன்பிறப்புகள் சின்னி கிருஷ்ணன், பூச்சி முருகன், அந்தியூர் சிவா, காஞ்சிபுரம் இளங்கோ, பொ.தங்கப்பாண்டியன் ஆகியோரும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கவர்கள். அண்ணன் இராவணன், வழக்கறிஞர் அ. அருள்மொழி, ஓவியர்
ன், மருது, கவிதாபாரதி, அறிவுமதி, பழநிபாரதி, செளந்தர் அண்ண தமிழ்மண் இளவழகனார், தாமிரா, பதி. அரசு, விகடன் ஆசிரியர் ரா. கண்ண ன், க. திருநாவுக்கரசு, அ. மார்க்ஸ் , சுப. வீரபாண்டியன், பேராசிரியர்கள் க. நெடுஞ்செழியன் - சக்குபாய், பெல். ராஜன், வரதராஜன், தலித் முரசு’ புனிதப்பாண்டியன், தி.இரா.வேங்கடாசலபதி, பழ. அதியமான், திருநீலகண்டன், சுகுணா திவாகர், வே. மதிமாறன், திண்டுக்கல் மதி, உடுமலை பிரகாஷ், கருப்பு பிரதி நீலகண்டன், பிரின்ஸ், இரா. வினோத், எவிடென்ஸ் கதிர், ந. வினோத்குமார்,
அன்பழகன், சையது ஆசாத், கதிரவன், தமிழ்க்கனல், முத்துகிருஷ்ணன், பெரியார் திடல் சரவணன், 'திடல் கலை, ஜோ. ஸ்டாலின், அபுதாஹிர், பூ.கொ. சரவணன், பிரகாஷ், நா. ப. சேதுராமன் ஆகியோரையும் நினைவு கூர விரும்புகிறேன்.
ஒரு படைப்பாளி, பதிப்பாளராக இருக்க வேண்டும். அத்தகைய படைப்புப் பதிப்பாளர் யுகன். அழகியலாய் எழுதுவதும் அழகிய லாய் அச்சிடுவதும் அவருக்குக் கைவந்த கலை. அவரைப் பதிப்புத் துறைக்குள் போகவேண்டாம் என்று தடுத்தவன் நான். எனது புத்தகத்தையே இன்று அவர் வெளியிடுகிறார். பதிப்பை வெறுப்பாய் இல்லாமல் விருப்பாய், நேர்த்தியாய் செய்து காட்டியதன் மூலம் பல பத்து ஆண்டுகள் கண்ட இத்தொழிலில் குறிப்பிடத்தக்க முகங்களில் ஒன்றாய் சில ஆண்டுகளிலேயே நற்றிணையைக் கொண்டுவந்து நிறுத்தி இருக்கும் யுகனுக்கும் அவரது வாழ்க்கை இணையருக்கும் நன்றி. வெங்கடேசன் உள்ளிட்ட நற்றிணை நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி. 'வீர விரலோன்' ஹாசிப் கான், 'ஓவிய காவியன்' பிரேம் டாவின்சிக்கும் கலைவணக்கம்!
'நன்றி என்பது பலன் பெற்றவர் காட்ட வேண்டிய குணம். செயல் செய்தவர் எதிர்பார்க்கக் கூடாது' என்றார் அறிவாசான் பெரியார். இவர்கள் எதிர்பார்ப்பவர் அல்லர். ஆனால் நான் நன்றி மறவாதவன்.
- ப.திருமாவேலன்
05.07.2018