ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே!
ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே!
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே!
தமிழ் நாடு கல்வி குறித்து அசர், பிசா ஆகிய அறிக்கைகள் முன்வைக்கும் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு நூலாசிரியர் நங்கிள்ளி கல்வியியல் துறையில் அவரது கருத்துகளை முன்வைக்கிறார். பிசா, அசர் இரண்டுமே தமிழ் நாடு கல்வித் தரம் எந்தளவுக்குப் பின்தங்கியுள்ளது எனக் காட்டுகின்றன. இந்தக் கல்வித் தரம் பின்தங்கிப் போனதற்குக் காரணம் இங்கு சமூகநீதி, இடஒதுக்கீடு ஆகியவற்றுக்காகப் போராடிய தலைவர்கள் கல்விக்கும் சமூகநீதிக்குமான உறவைப் புரிந்து கொள்ளவில்லை. தமிழ் நாடு கல்வித் திட்டம் என்பது பார்ப்பனர் உள்ளிட்ட மேல் சாதியினரையும், மேட்டுக்குடி மக்களையும் முன்னேற்றுவதற்கான கல்வித் திட்டம் ஆகும். இது அமெரிக்காவிலும் ஐடி துறைகளிலும் வேலைகளை வாங்கித் தருமே தவிர புதிய படைப்புகள் எதையும் உருவாக்கித் தர வழி வகுக்காது. பார்ப்பனர்கள் பின்பற்றிய கல்வியில் நாங்களும் வெற்றி பெற்றுக் காட்டுவோம், பார்ப்பனர்கள் புகுந்த அமெரிக்க வேலைகளில் நாங்களும் நுழைந்து காட்டுவோம் என்பது சமூக நீதிப் பார்வை ஆகாது. ஆனால் இந்தத் தவறைத்தான் இங்குள்ள சமூகநீதித் தலைவர்கள் செய்து வருகிறார்கள். இன்றைய நெட்டுரு போடும் கல்வித் திட்டத்துக்கு மாற்றாகப் படைப்பியல் நோக்கிலான கல்வியை, ஆங்கிலவழிக் கல்விக்கு மாற்றாகத் தமிழ்வழிக் கல்வியை முன்னிறுத்திப் போராடியிருந்தால் இன்று தமிழர்கள் எங்கும் வேலை அலைய வேண்டி இருந்திருக்காது. வெளிநாட்டினர் இங்கு வேலை தேடி வரும் நிலை ஏற்பட்டிருக்கும். இதுதான் ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே! நூலின் மைய இழை.