யார் கைகளில் இந்து ஆலயங்கள்?
யார் கைகளில் இந்து ஆலயங்கள்?
இன்றைக்கும் தமிழ்நாட்டில் கோயில் மடங்களுக்கு ஐந்து லட்சம் ஏக்கருக்கு மேல் நிலமும், பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களும், நகைகளும் சொந்தமாக உள்ளன. நாடு முழுவதும் கோயில்கள், மடங்களுக்கு உள்ள சொத்துக்களையும் வருமானங்களையும் அபகரிக்கும் முயற்சிகளில் கோயில் தர்மகர்த்தாக்கள், மடாதிபதிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
‘சிவன் சொத்து குலநாசம்’ என்று பொதுமக்களை மிரட்டியவர்கள்தான் சிவனின் பெயரால் சொத்துக்களைக் குவித்து அனுபவித்து வந்தார்கள்.
மடங்கள், சன்னியாசிகளின் உறைவிடமாக அல்ல, நிலக்குவியலின் உச்சமாகவும் இருந்தது என்பதே வரலாறு.
இறையுணர்வும் வழிபாட்டு உரிமையும் மதிக்கப்பட வேண்டியதே. ஆனால், இவைகளை கருவியாகக்கொண்டு மதவெறி அரசியலை முன்னெடுப்பதும் அதற்காக கோயில் மற்றும் அறநிலையங்களை அரசியல் களங்களாக மாற்றும் முயற்சிகளை உடைத்தெறிய வேண்டும். இத்தகைய பின்புலத்தில், கோயில்களைப் புரிந்துகொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும்.