வாழ்க்கைத் துணைநலம்
வாழ்க்கைத் துணைநலம்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
வாழ்க்கைத் துணைநலம்
வாழ்க்கை இன்பதுன்பங்களிலும், போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட – சமத்துவச் சுபாவம் மிளிரும் மாறுதல் அவசியமா இல்லையா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக்கொண்டே யோசிக்காதீர்கள். உங்களுடைய செல்வப் பெண் குழந்தைகளையும், அன்புச் சகோதரிகளையும் மனத்தில் கொண்டு யோசித்துப் பாருங்கள். உங்கள் தாய்மார் சுதந்தரவாதிகளாயிருந்தால், நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இன்று உலகில் கீழ்ச்சாதியார் என்பவர்களுக்குச் சம சுதந்தரம் வேண்டும் என்று போராடுகிறோம். அரசாங்கத்தினிடமிருந்து விடுதலை பெற்றுச் சுதந்தரமாய் வாழ வேண்டுமென்று போராடுகிறோம். அதே போராட்டத்தை நமது தாய்மார்கள் விஷயத்திலும் நமது சகோதரிகள் விஷயத்திலும் கவனிக்க வேண்டாமா? அந்தப்படிக் கவனிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளுவீர்களேயானால், அதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைவிட வேறு சந்தர்ப்பம் ஏது என்று கேட்கிறேன்.