வழி வழி வள்ளுவர்
வழி வழி வள்ளுவர்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
வழி வழி வள்ளுவர்
தமிழ் நாட்டின் பண்பாட்டை உருப்படுத்திய இலக்கியங்களுள் தலைமை சான்றது திருக்குறள். முப்பாலாக விளங்கும் அந் நூலை எப்பாலவரும் ஏற்றுப் போற்றுவர். தொன்று தொட்டு அதன் சொல்லையும் பொருளையும், தமிழ்ப் புலமை யுலகம் பொன்னே போற் போற்றி வரு கின்றது. சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகிய நாற்பெருங் காப்பியங்களும், 'பாட்டுக்கொரு புலவன்' என்று பாராட்டப்பெறுகின்ற பாரதியார் இயற்றிய கவிதைகளும் திருக்குறளால் வளம் பெறும் முறையினைக் காட்டுதலே, ‘வழிவழி வள்ளுவர்' என்னும் இந் நூலின் நோக்கமாகும். இவற்றுள் 'கம்பராமாயணத்திலே வள்ளுவர்’ என்ற கட்டுரை சென்னை வானொலியில் யான் நிகழ்த்திய சொற்பொழி வின் சுருக்கம். ‘பாரதியார் கவிதையிலே வள்ளுவர்’ என்பது டாக்டர் R. K. சண்முகம் செட்டியாருடைய அறுபதாம் ஆண்டு நினைவு மலரில் யான் எழுதிய கட்டுரையின் பெருக்கம்.