வர்ணத்திலிருந்து ஜாதிக்கு
வர்ணத்திலிருந்து ஜாதிக்கு
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
வரலாற்று ஆய்வுத்துறையில் தமிழ் அறிவு சமூகத்திற்கான மிக முக்கிய நூலாக "வர்ணத்திலிருந்து சாதிக்கு-மேய்ச்சல் சமூகத்திலிருந்து விவசாய சமூக உருவாக்கத்திற்கு மாறுதல்" தியாகி தோழர் யாளவர்த்தி நவீன் பாபு 1989 ஆம் ஆண்டு JNUவில் ஆய்வியல் அறிஞர் பட்டத்திற்கான ஆய்வு திகழும்... தனது கல்லூரி ஆண்டுகள் முதலாக ஒரு சிறந்த மாக்சிய மாணவனாக இருந்தவர் நவீன் பாபு. “Kalam”என்ற மாணவர் இதழை நடத்தினார் மற்றும் AIRSF என்ற புரட்சிகர அமைப்பையும் வழி நடத்தினார்.
இந்தியாவில் ஆசிய உற்பத்தி முறை-தனி சொத்து இல்லாமை, நிலப்பகுத்துவத்தின் இல்லாமை, வர்ணம் மற்றும் சாதியத்தின்- பண்பு, உற்பத்தி உறவில் உள்ள இரு வகை தன்மையை தட்டிக் கழிப்பது, வர்ணமும் சாதியும் ஒன்றுதான் என்று கூறுவதன் மூலமாக வரலாற்று திரிப்பு செயல்களுக்கு சிறந்த பதிலடியாக இந்நூல் இருக்கும்.
ரிக் வேத சமூகத்தில் உபரி சுரண்டல் இருந்ததா? மேய்ச்சல் சமூகத்திற்கான பொருளியல் காரணங்கள்? பிறப்பின் அடிப்படையில் வர்ண முறை இருந்ததா? வேத கால சமூக அமைப்பு? ரிக் வேத சமூகத்தில் மற்றும் பின் ரிக் வேத சமூகத்தில் அரசு முறை எவ்வாறு இருந்தது? பௌத்த மத எழுச்சிக்கான காரணங்கள்? சத்திரிய-பிராமண வர்ணங்களுக்கு இடையிலான உறவு? ஆரியர்-தாசர் குழுகளுக்கு இடையிலான உறவு மற்றும் ஆரியமயமாக்கல்? மத்திய கங்கை சமவெளியில் விவசாய உற்பத்தி முறை தோற்றத்திற்கான காரணங்கள்? போன்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கு இந்நூல் மார்க்சிய வர்க்க பார்வையில் பதில் அளிக்கின்றது.
இறுதியாக...தோழர் நவீன் பாபு 2000ஆம் ஆண்டு மக்கள் விரோத அரசின் ராணுவ படையால் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கொல்லப்பட்டார். நவீன் பாபு தியாகி ஆன செய்தியை அறிந்த எழுத்தாளர் கூகி வா தியாங்கோ கூறியது, "உங்கள் நாட்டில் புரட்சி என்ற கொடியை சுமந்து விழும் ஒவ்வொரு இளைஞர்கள் போலப் பல இளைஞர்கள் முன்னுக்கு வந்து அக்கொடியை கையில் ஏந்தி முன்னோக்கி செல்வர். அவர்கள் மத்தியில் நவீன் பாபு என்றென்றும் மறையாது இருப்பார்."
சமூக மாற்றத்தை விரும்பும் அறிவு ஜீவிகள் புத்தகமும் கையுமாக என்றும் இருப்பதில்லை என்பதற்கு தோழர் ஓர் உதாரணம்.