வரமுடிந்தால் வந்துவிடுங்கள் தோழர் - சிராஜுதீன்
வரமுடிந்தால் வந்துவிடுங்கள் தோழர் - சிராஜுதீன்
இத்தொகுப்பில் தோழர் கருணாவைப் பற்றி ஒவ்வொருவரும் எழுதியிருப்பதை வாசிக்க வாசிக்க என் கண்கள் கசிந்து கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. எத்தனை அருமையான தோழனை நாம் இழந்து நிற்கிறோம்? தன் அர்ப்பணிப்புமிக்க உழைப்பாலும் சமூகச் செயல்பாடுகளாலும் சக தோழர்கள் மீது கொண்ட நேசத்தாலும் அவன் நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் சுடராகப் பிரகாசிக்கிறான்.
நாங்கள் வாழ்ந்த எல்லா வீடுகளுக்கும் கருணா வந்து தங்கியிருக்கிறான். பத்தமடையில் நாங்கள் வாழ்ந்த காலத்தில் வீட்டைச் டுத்தம் செய்யும் நாட்களில் அவனும் லட்சுமிகாந்தனும் எனக்குத் துணை நின்ற நாளில் வீட்டுக்குள் நள்ளிரவில் பாம்பு வந்துவிட்டது. லட்சுமிகாந்தனின் பதட்டமும் கருணாவின் அட… பாம்புதாபே… என்கிற அலட்சியமும் இன்றும் மனதில் நிற்கின்றன.