வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்
வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்
நீலகண்ட சாஸ்திரியார் முதலிய அறிஞர்கள் தென்னிந்திய அரசியல் வரலாற்றைத் தெளிவாகவும் விரிவாகவும் எழுதியிருப்பினும் சமூக, பொருளியல் வளர்ச்சி பற்றிய அவர்களுடைய ஆய்வுகள் தேக்கநிலை ஆசியக் கொள்கையை மறுக்கப் போதுமானவையாக இல்லை. இக்குறைபாட்டை நீக்க மூன்று நெறிகளைப் பின் பற்றியுள்ளேன். ஒன்று, மூலச்சான்றுகளுக்கு முதன்மையிடம் தரல். கல்வெட்டுச் சான்றுகளைக் கையாளுகையில் அவற்றின் மூல பாடங்களே பெரும்பாலும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இரண்டாவது, இப்பகுப்பாய்வுக்கு ஓர் அறிவியல் வழி புறநோக்கு அணுகுமுறை தேவையென்ற நோக்கில் புள்ளியியல் முறை பயன்படுத்தப்பட்டது. மூன்று, குறுகிய நிலவட்டங்களையே (micro-regions) ஆய்வுக்கு அடிப்படை நில அலகுகளாகத் தேர்ந்து கொள்ளப்பட்டன. குறுநிலவட்ட அளவு ஆய்வில் தான் பிரச்சினைகளை ஆழமாகப் பார்த்து சமூக மாற்றங்களை நன்கு புரிந்துகொள்ள இயலும். இந்த அணுகுமுறைகளைப் பின்பற்றியதன் விளைவாகச் சோழர் காலந்தொட்டு விஜயநகர ஆட்சிக் காலம் முடிய தென்னகத்தில் ஏற்பட்ட சமூக, பொருளியல் வளர்ச்சி பற்றி ஓரளவு தெளிவு ஏற்பட்டுள்ளது என்று இந்நூல் காட்டும்.