Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

வணக்கம் வலம்புரிஜான்

Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

வணக்கம் வலம்புரிஜான்

மறைந்த பத்திரிகையாளர் வலம்புரிஜான் ‘நக்கீரன்’ பத்திரிகையில் எழுதி, அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பிய ‘வணக்கம்’ தொடர் பிறகு புத்தக வடிவமும் பெற்றது. தமிழக அரசியல் களம் தற்போது அடைந்திருக்கும் பல மாற்றங்களை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டிருக்கிறார் வலம்புரிஜான். அரசியல் சூட்டுக்கு ஏற்ப அந்தப் புத்தகத்தை இப்போது மறுபதிப்பித்திருக்கிறது ‘நக்கீரன் பதிப்பகம்’. நூலிலிருந்து சில பகுதிகள். அதிமுக நமது கழகமாகி நாளாகிறது. கொள்ளைப் பணத்தை வைத்துக்கொண்டு அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று அரசாட்சி நடத்தும் ‘அன்றிற் பறவைகளை’ நினைத்தால் தூவல் தூவலாக உண்மைத் தமிழர்கள் உரிப்பார்கள். இது நிச்சயம்! வடுகப்பட்டி தர்மராஜன்தான் அப்போதைக்கு சசிகலாவுக்கு ஆஸ்தான ஜோதிடர். அவர் சொன்னால் சொன்னதுதான்.இப்போது சசிகலாவின் பணபலத்தில் மித்ரன் நம்பூதிரிகூட சாதாரணமாகிவிட்டார். வடுகப்பட்டி தர்மராஜன்தான் சசிகலா ஒருகாலத்தில் முதலமைச்சராகிவிடுவார் என்று சொன்னவர். இதை உறுதிப்படுத்திக்கொள்ளுவதற்காக சசிகலா அப்போதே, பல ஜோதிடர்களிடம் நடந்தார். இன்றும் அவர் முதலமைச்சராக ஆகத் தக்க வாய்ப்பு நிச்சயமாகவே இருக்கிறது. - தமிழ் தி இந்து

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.