வளர்ச்சி நோக்கில் தமிழ் கி.வீரமணி
வளர்ச்சி நோக்கில் தமிழ் கி.வீரமணி
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
வளர்ச்சி நோக்கில் தமிழ்
பெரியாரை தமிழகத்தைத் தாண்டி இமயம் வரை, ஏன்? உலகத்தின் பல்வேறு நாடுகளில் கொண்டு போய் சேர்த்த பெருமை தமிழர் தலைவர் ஆசிரியருக்கே உண்டு. ‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்” என்றார் புரட்சிக் கவிஞர். அதை செயலாக்கியிருப்பவர் ஆசிரியரே. அதனால் தான் தந்தை பெரியார் தமிழர் தலைவர் என்ற நிலையைத் தாண்டி உலகத் தலைவராகப் போற்றப்படுகிறார்.
"முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலகப் பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால் தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்" (குடிஅரசு 26.1.1936) என்று கழிவிரக்கத்தோடு தந்தை பெரியார் கூறியதைக் கவனிக்க வேண்டும்.
87 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் கூறியதை அவர்தம் கொள்கை வாரிசான ஆசிரியர் அவர்கள் சரியான இடத்தில் (உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்) சரியான நேரத்தில் பொருத்தமாகக் கூறியிருப்பது எத்தகைய நேர்த்தி - நேர்த்தியிலும் நேர்த்தி!