டைகரிஸ்
டைகரிஸ்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
இந்த நாவல் 1914 தொடங்கி 1918 வரையிலான காலம் வரை தன் எல்லைகளை வரையறுத்துக் கொண்டுள்ளது. அது முதல் உலகப் போரின் காலம். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு நமது கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து போருக்குப் போனவர்கள் ஏராளம். போருக்கு ஒருவனை அனுப்பி வைக்க ஒரு சமூகத்தில் பல தரப்பட்ட நியாயங்கள், கதைகள், பெருமைகள் கட்டமைக்கப்படுகின்றன. அது சாகசத்தின் வெளிப்பாடாகவும் தேசபக்தியின் வடிவமாகவும் நிலை நிறுத்தப்படுகிறது. எல்லாக் காலத்திலும் அவைகள் ஒன்று போலவே உள்ளன. ஆனால் களம் வேறு வகையான காட்சிகளைக் காட்டுகிறது. போருக்குப் போய் வந்தவனிடம் கடைசியாக எஞ்சி நிற்கும் கேள்வி போர் என்பது எதற்காக என்பதுதான். அன்றைய மெசபடோமியா என்ற இன்றைய ஈராக்கில் பாயும் டைகரிஸ் எனும் நதி அந்தப் பெரும் போரின் சாட்சியமாய் வாழ்ந்து பாய்கின்றது. அவள் ஆயிரக்கணக்கான இந்திய போர் வீரர்கள் மற்றும் கணக்கில் வைக்கப்படாத தொழிலாளர்கள் என்று போரின் போது உடன் இருந்த இந்தியக் கூலிகளின் கதைகளை அறிந்தவள்.சலசலக்கும் அந்த டைகரிஸ் நதியின் ஓசையில் அந்தக் கதைகளை நீங்கள் கேட்கக் கூடும்.