துறவிகளும் புரட்சியாளர்களும்: சீனா 1957 - ரொமிலா தாப்பர் / Romila Thapar (ஆசிரியர்), டேவிட்சன் (தமிழில்)
துறவிகளும் புரட்சியாளர்களும்: சீனா 1957 - ரொமிலா தாப்பர் / Romila Thapar (ஆசிரியர்), டேவிட்சன் (தமிழில்)
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
துறவிகளும் புரட்சியாளர்களும்: சீனா 1957 - ரொமிலா தாப்பர் / Romila Thapar (ஆசிரியர்), டேவிட்சன் (தமிழில்)
ரொமிலா தாப்பர் 1957 இல் சீனாவுக்குச் சென்று வந்த பயணக்குறிப்பே "துறவிகளும் புரட்சியாளர்களும்" ஆகும். ஸ்ரீலங்காவின் கலைவரலாற்றறிஞரான அனில் டி சில்வாவின் ஆராய்ச்சி உதவியாளராக அவருடன் சென்று, மேஜிஷன், டன்ஹுவாங் ஆகிய இரு பெரும் புத்தமத வரலாற்றிடங்களில் பணிபுரிந்தார்.
புரியாத மௌனம் சீனாவில் நிலவிய காலகட்டம் அது. மாவோ ஆட்சியதிகாரத்துக்கு வந்ததும் சீனா மாறத் தொடங்கி இருந்தாலும் பெரும்பாலான பழைய வழிமுறைகள் அப்படியேதான் இருந்தன. அவர் ஆய்வு செய்ய வந்த புத்தமத வரலாற்றிடங்கள் தவிர பீஜிங், சியான், நான்கிங், ஹங்கை போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களுக்கும் சீனாவின் உட்பகுதியில் இருந்த கிராமங்களுகும் ஆசிரியரால் பயணம்செய்ய முடிந்தது. அவரால் முடிந்த வரையில் சீன சமூகத்தை புரிந்துகொள்ள முயன்றார். சீனாவில் செலவழித்த நேரத்தில் அவர் கவனித்த உலகின் மிகப்பழமையான மிகச் சிக்கலான நாடுகளில் ஒன்றான சீனாவின் ஆழமான, வேடிக்கையான, அசலான, தொடர்ந்து உள்ளொளி அளிக்கும் கண்ணோட்டத்தை அப்படியே எதையும் மாற்றாமல் இந்நூலில் பதிவு செய்கிறார்.