தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் வரலாறு
தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் வரலாறு
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தொழிற்சங்க வரலாற்று நூல்கள் தமிழில் மிகக் குறைவு. திரு.வி.க. சார்ந்தும் இடதுசாரி இயக்கங்கள் சார்ந்தும் தொழிற்சங்க நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. 70களில் இருந்தே தி.மு.க., அ.தி.மு.க போன்றவை தொழிற்சங்கங்களை நடத்திவந்தாலும் அவற்றின் வரலாறு முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. இந்த நிலையில், திராவிட இயக்க வரலாற்றாசிரியரான க. திருநாவுக்கரசு தி.மு.கவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் வரலாற்றைத் தொகுத்திருக்கிறார். தி.மு.கவை அண்ணா துவங்கியபோது, அதனை தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி என்று குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டும் க. திருநாவுக்கரசு அந்த இடதுசாரிப் பார்வையின் அடிப்படையிலேயே தி.மு.க. தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டதை விவரிக்கிறார். 1950களில் இடதுசாரி இயக்கங்களுக்கும் தி.மு.கவிற்கும் உரசல் ஏற்பட்ட நிலையில், பல இடங்களில் தீவிரமாக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது அக்கட்சி. முடிவில் 1970ல் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை நிறுவப்படுகிறது. இது மட்டுமல்லாமல், இந்த சங்கம் நடத்திய போராட்டம், கோரிக்கைகள், நடவடிக்கைகளையும் பட்டியலிடுகிறார். மேலும், இதனோடு இணைக்கப்பட்டுள்ள பிற தொழிற்சங்கங்களின் விரிவான பட்டியலையும் புத்தகத்தில் தந்திருக்கிறார். தமிழ்நாட்டின் தொழிற்சங்க வரலாறு, 1950 – 70வரையிலான அரசியல் மோதல்களைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும்.