தோழர்கள்
தோழர்கள்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தோழர்கள்
நபியவர்களைச் சுற்றி இருந்த அத்தனைபேரும் சகோதரர்களாகவே மதிக்கப்பட்டார்கள். அவர்களைக் குறிக்க ஒரே ஒற்றைச் சொல் போதுமானதாக இருந்தது. அவர்கள் அனைவரும் ஸஹாபாக்கள் எனும் தோழர்கள்.
இந்த நூல் பெரும் சேகரம். ஒவ்வொரு தோழரைக் குறித்தும் மிகத் தெளிவான வரலாற்றுக் குறிப்புகளை மட்டும் வழங்காமல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நேர்த்தியாக எடுத்துரைக்கின்றது. ஒவ்வொரு தோழரின் வாழ்வையும் நாம் படிக்கும்போது மனம் தவிக்கின்றது. பரபரக்கின்றது. அழுகை முட்டிக்கொண்டு வருகிறது.
இந்த நூலை நூலாசிரியர் நூருத்தீன் எழுதிய விதம் அற்புதம். ஒரு திரைமொழியை அவர் நூல் முழுவதும் கையாண்டிருக்கிறார். ஒவ்வோர் அத்தியாயத்தின் திறப்பும் முடிப்பும் செம்மையாக அமைந்திருக்கின்றன. காட்சிகள் மனத்திரையில் விரிகின்றன. குதிரையின் குளம்பொலிகள் செவிக்குள் ஒலிக்கின்றன. எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் நிகழ்வுகளின் நிஜங்களில் ஐயப்பாட்டின் நிழல்கூட விழுந்துவிடாதவாறு மிகவும் கவனமாக, நிறுவப்பட்ட சான்றுகளின் வாயிலாகப் பார்த்துப் பார்த்துக் கோத்தும் சுவைபடவும் தந்திருப்பது நூலாசிரியருக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் அற்புதத் திறமை என்றால் அது மிகையன்று.
நபித்தோழர் ஒவ்வொருவரைப் பற்றியும் முழுமையாக அறிந்து கொள்வதற்கு அவர் எடுத்துள்ள முயற்சிகள், வரலாற்று நூல்களில் தேடித் தந்துள்ள சான்றுகள் உளமாரப் பாராட்டப்பட வேண்டியவை! இஸ்லாமியப் பாடசாலைகளில் வரலாற்றுப் பாடமாக வைக்கத் தகுந்த சத்திய ஸஹாபாக்களின் வாழ்க்கை இது.