Skip to product information
1 of 2

நாம் தமிழர் பதிப்பகம்

தொல் திராவிட மொழி கண்டுபிடிப்பு

தொல் திராவிட மொழி கண்டுபிடிப்பு

Regular price Rs. 100.00
Regular price Sale price Rs. 100.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
பழைமை வாய்ந்த மொழிகளாகக் கருதப்படும் மொழிகளுள் தமிழும் ஒன்று எனவும் அதன் மூல மொழியாகிய முதன் மொழி எது எனக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அது தமிழ் மொழியே எனவும் நிறுவும் வகையில் அமைந்திருப்பதே‘தொல் திராவிடமொழி கண்டுபிடிப்பு' என்னும் இந்த நூல். ரோமானிய மொழிகளுக்கு இலத்தீன் முதல்மொழியாகவும், வடக்கே வடஇந்திய மொழிகளுக்கு சமற்கிருதம் முதல்மொழியாகவும் இருப்பதுபோல திராவிட மொழிகளுக்கு முதன்மொழியாகத் தொல் திராவிட மொழியாகத் தமிழ் உள்ளது என்று நுட்பமான ஆய்வின் மூலம் வெளிப்படுத்துகிறது இந்த நூல். அதனால் பல திராவிட மொழிகளையும் ஆய்வு செய்து ஒப்பிட்டுக் காட்டி உண்மை காண மிகவும் முயற்சி செய்ததன் பயன் இக்கண்டுபிடிப்பு நூலாக மலர்ந்துள்ளது. மொழியியலைத் தமிழ்மொழியின் இயல்பினை அறியாமல் எதையோ எழுதியும் பேசியும் தமிழ்க் கொலை புரிபவர்கட்கு இந்த நூல் தேவையான விடையளிக்கக் காணலாம். படித்து உணர வேண்டும்.
அருமையும்பெருமையும்படைத்த இந்த நூலைப் பேராசிரியர் சுந்தர சண்முகனார் அரிதின் முயன்று தமிழ்ப்பெருமையை நிலைநாட்டியுள்ளார். அவருக்குத் தமிழுலகம் கடமைப் பட்டுள்ளது. திராவிட மொழிகள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்து தமிழ்மொழியுடன் ஒப்பிட்டு முடிவினை நிலைநாட்டியுள்ளார் பிறமொழிகளைப் படித்துவிட்டுத் தமிழைக் கூறுபோட்டுப் பிறமொழிகளுக்கு உட்படுத்தும் ஆய்வாளர்கள் நடுவில் தமிழின் பெருமையை நிலைநாட்டியுள்ளார் நூலாசிரியர். பல ஆய்வு நூல்கள் படைத்த நூலாசிரியரின் தெளிவான, எளிய, ஒப்பியல் நோக்கிலான மொழிநடையை அனைவரும் படித்து உணரவேண்டும். ஏற்கெனவே வெளிவந்துள்ள இந்த நூல் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர் நூல் வரிசையில் இப்போது வெளிவந்துள்ளது.
View full details