தேனி நியூட்ரினோ திட்டம் அச்சங்களும் அறிவியலும்
தேனி நியூட்ரினோ திட்டம் அச்சங்களும் அறிவியலும்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
த.வி.வெங்கடேஸ்வரன் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார். 'கலகக்காரர் ஐன்ஸ்டீ ன் உள்ளிட்ட பல அறிவியல், நூல்களை எளிய தமிழில் எழுதியுள்ளார். துளிர் அறிவியல் இதழ் நிறுவனர்களில் ஒருவர். சமகால சமூகத்தில் அறிவியல் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை பல நாடுகளில் நடத்தப்படும் ஆய்வு அரங்குகளிலும் ஆய்வு இதழ்களிலும் சமர்ப்பித்துள்ளார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கேரள சாஸ்த்திர ஸாகித்திய பரிஷத் , அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கம் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்புகளில் இருந்துள்ளார்.
நியூட்ரினோ என்றால் என்ன? அதை ஏன் ஆராய்ச்சி செய்கிறார்கள்? அப்பகுதிவாழ் மக்களுக்கு பாதிப்பு ஏதும் உண்டா? நியூட்ரினோ திட்டத்தால் கதிரியக்க பாதிப்பு உண்டா? குகை அமைக்க பயன்படும் வெடிமருந்தால் அணைகளுக்கு பாதிப்பு உண்டா? அமரிக்காவின் பெர்மிலாப் நியூட்ரினோ கற்றைகளை ஆராய்வது தான் திட்டமா? நியூட்ரினோ திட்டத்தால் என்ன பயன்? அடிப்படை அறிவிலை ஆதரிப்பது ஏன்? சட்டத்தை வளைத்து அனுமதி தரப்பட்டுள்ளதா?