Skip to product information
1 of 3

விடியல்

தன்னார்வக் குழுக்களும் புரட்சிகர் நிலைபாடும்

தன்னார்வக் குழுக்களும் புரட்சிகர் நிலைபாடும்

Regular price Rs. 40.00
Regular price Sale price Rs. 40.00
Sale Sold out
Shipping calculated at checkout.

அரசு சாரா அமைப்பு (NGO) என்பதே தவறாகச் சூட்டப்பட்ட பெயர் ஆகும். அரசு சாரா அமைப்புகள் அனைத்திற்கும் ஏகாதிபத்திய அமைப்புகள், ஏகாதிபத்திய அரசாங்கங்கள் மற்றும் தரகு ஆட்சியினரால் நிதி உதவி அளிக்கப்படுகின்றது. அரசு சாரா அமைப்புகள் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு தொடர்புப் பாலமாகச் செயல்படுகின்றன. சுரண்டல்வாதிகள் சிவில் சமூகத்தின் கருத்துகளில் தாங்கள் விரும்பும் தாக்கங்களை ஏற்படுத்த இவற்றை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஏகாதிபத்திய மூலதனத்தின் கையாட்கள் ஆவர். 

அனைத்து அரசு சாரா அமைப்புகளும் கண்ணுக்குத் தெரியாத ஏகாதிபத்தியக் கைகளினால், அந்த ஏகாதிபத்தியத்தின் நீண்டகாலக் குறிக்கோளை அடைவதற்காக ஆட்டுவிக்கப்படுகின்றனர். 

இவ்வாறாக வளர்ச்சித் திட்டம், சமூக நீதி, மனித உரிமை, அடிமட்ட அளவிலான சனநாயகம் போன்ற பெயர்களில் அரசு சாரா அமைப்புகளின் கருவூலத்திற்குப் பெரும் நிதி வழங்கப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் உலக வங்கி மற்றும் பிற ஐ.நா. அமைப்புகள், தமது நிதி யாவும் அரசு சாரா அமைப்புகள் மூலம் பயன்படுத்தப்பட வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.

View full details