தமிழர் மானிடவியல்
தமிழர் மானிடவியல்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் மனிதர்கள், மனித நடத்தைகள், சமூகங்கள் பற்றி அறிவியல் பூர்வமாக ஆய்வது மானிடவியல். சமூக மானிடவியல் சமூக நடத்தைகளையும், பண்பாட்டு மானிடவியல் நெறிமுறைகள், மதிப்பீடுகள் உள்ளிட்ட கலாச்சார அர்த்தங்களையும் ஆய்வு செய்கின்றன.
இந்த நூலில் பக்தவத்சலபாரதி தமிழர் என்னும் இனத்தை மானிடவியல் நோக்கில் ஆராய்கிறார். இதற்காக ஆதி சமூக முறையையும் பண்டைத் தமிழ்ச் சமூக முறையையும் எவ்வாறு இருந்தன என்பதில் தொடங்கி தாய்வழிச் சமூகம், சாதி, சமூக மாற்றம், திருமணம், சடங்குகள், தெய்வங்கள், திருவிழா, கைவினைக்கலை, புழங்குபொருள், கிராமம்-நகரம், சென்னைத் தமிழ் போன்றவற்றுடன் சமகாலத் தமிழ்ச் சமூகம் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பல்வேறு தலைப்புகளில் எளிய நடையில் நமக்குக் காட்சிப் படுத்துகிறார். இதன் மூலம் இந்த நூல் தமிழர் வாழ்வைப் புறநிலைப்படுத்திப் பார்க்க விரும்புவோருக்கு ஒரு கைநூலாகத் திகழ்கிறது; ஆய்வில் ஈடுபடுவோர் கட்டாயம் படிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
மானிடவியல் எழுத்துக்கள் என்பன புத்தக வாசிப்பு, மண்வாசிப்பு, மனித வாசிப்பு ஆகிய மூன்றும் சேர்ந்ததாகும். ஆனால் இந்தத் துறை சார்ந்து தமிழில் வந்துள்ள எழுத்துக்கள் மனித வாசிப்பை நிறைவாகச் செய்யவில்லை. பக்தவத்சல பாரதியின் எழுத்துக்கள் அந்தக் குறையை நிறைவு செய்கின்றன.