தமிழகத்தில் நிலப் பிரபுத்துவம் வீழ்ந்த கதை
தமிழகத்தில் நிலப் பிரபுத்துவம் வீழ்ந்த கதை
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்களின் தமிழகம் பற்றிய பொருளாதார, அரசியல் சமூக மாறறங்கள், குறிப்பாக நில உறவுகளை பற்றிய மிக சிறந்த ஆய்வு இங்கு நூல் வடிவம் பெற்றுள்ளது. “நிலச்சீர்த்திருத்தம் என்ற திட்டம் தமிழகத்தில் படுதோல்வியைச் சந்தித்த ஒரு முயற்சி. இதனை ஆய்வு செய்து பல புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. அப்படியானால் காவேரிப் படுகையில் பரவலாக நிலவி வந்த நிலப்பிரபுத்துவ உறவு முறைகள் அப்படியே இப்போதும் தொடர வேண்டும் அல்லது வேறு வடிவத்திலாவது தொடர வேண்டுமே, இதனைத் தேடி அலைந்த எனக்குக் கிடைத்த விடை ‘முடிந்து போன ஒன்றை நீங்கள் தேடுகிறீர்கள்’ என்பதே. ஆனால் மிகுந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட காவேரிப் படுகைப் பகுதியிலிருந்து வந்த ஒரு ஆய்வுகூட இதனை ஆவணப்படுத்தவில்லை. இந்த இடைவெளியை நிரப்ப எடுக்கப்பட்ட சிறிய முயற்சியே இந்நூல். நிலப்பிரபுத்துவம் இப்பகுதியில் எப்படி வீழ்ந்தது என்பதை இதில் ஆவணப்படுத்தியுள்ளேன். தமிழகத்தின் எழுதப்படாத வரலாறுகள் ஏராளமாக உள்ளன என்பதை நாளும் உணர்கிறேன். அதனை ஆவணப்படுத்தும் வாய்ப்பு பலருக்கும் வாய்த்தால் தமிழகத்தின் நல்லூழ் ஆகும்.”