
தமிழை இழிக்கும் வேத மரபு
கவிஞர் வைரமுத்து - ‘திருப்பாவை மற்றும் நாச்சியார் திருவாய்மொழி பாடிய ‘ஆண்டாள்’ தேவதாசி மரபில் வந்திருக்கலாம் என்று ஒரு ஆய்வாளர் குறிப்பிட்டதை சுட்டியதற்காகப் பார்ப்பனர்களும் ஜீயர்களும் வீதிக்கு வந்து போராடினார்கள். எழுதப்பட முடியாத இழி சொற்களை கவிஞர் வைரமுத்து மீது வீசினார்கள். அதன் எதிர்வினையாக ‘தமிழை இழிக்கும் வேத மரபு’ எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் ஜனவரி 30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. அதில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பெரியாரிய ஆய்வாளர் வாலாஜா வல்லவன் நிகழ்த்திய உரைகள் விரிவுபடுத்தப்பட்டு தோழர்கள் பலரின் விருப்பத்தையேற்று இந்த சிறு நூல் வரையறுக்கப்பட்டுள்ளது.
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.