தமிழ்ப் பெரியார்கள்
தமிழ்ப் பெரியார்கள்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்ப் பெரியார்கள்
உலகத்தில் வாழும்போது தமது வாழ்க்கை பிறருக்கு எடுத்துக்காட்டாக அமையுமாறு வாழ்பவர்கள் மிகச் சிலரே! அப்படி வாழ்ந்தவர்கள், வாழுபவர்கள் காலம் சென்றவர்களாயினும், சமகாலத்தவர்கள் ஆயினும் அவர்களது நெறிமுறைகளை, சிறப்புக்களை அனைவரும் அறியுமாறு பதிவு செய்து பரவச் செய்யவேண்டியது அவசியத்திலும் அவசியமாகும். உயர்ந்ததொரு சமுதாயத்தை உருவாக்கிட ஆர்வம் கொண்டு உழைக்கும் உயர்ந்த மனிதர்கள் தங்களது கடமையாகவே அதனைச் செய்வர்.
'அக்கிரகாரத்து அதிசய மனிதர்' என்று அறிஞர் அண்ணாவால் வர்ணிக்கப்பட்ட பெரியவர் வ.ரா. அவர்கள் இந்நூலில் தமது சமகாலத்து வாழ்வாங்கு வாழ்ந்த மாமனிதர்களைப் பற்றி விவரித்து எழுதியுள்ளார்.
வ.ரா. அவர்கள் பண்புகளால் தன்னலம் கருதாத தொண்டால், உயரிய சமூக சீர்திருத்த நோக்கங்களால் மிகவும் கம்பீரமாக நின்ற உத்தமர். தமது எண்ண ஓட்டத்தாலும் எழுத்தாற்றலாலும் தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றுவிட்டவர். தாம் அறிந்த பழகிய சிலரைப் பற்றி அவர் இந்நூலில் விவரித்திருக்கிறார். வெறும் புகழாரமாக மட்டுமன்றி, சில இடங்களில் சிலரைப் பற்றி விமரிசனமாகவும் தனது கருத்தை வெளிப்படுத்தியே செல்கிறார்.
அவர் இந்நூலில் குறிப்பிட்டுள்ள அனைவருமே தற்போது அமரர்களாகி விட்டவர்கள் என்றாலும்கூட மக்கள் மனதில் தமது சேவைகளால் நிலைத்து விட்டவர்கள்தான். இளைஞருலகம் படித்துப் பின்பற்றிப் பயனடைய வேண்டிய வரலாறு அவர்களது வாழ்க்கையாகும்.