Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

தகடூரான் தமிழ் நெஞ்சம்

Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00
எழுத்துவேந்தர் தகடூரான் அவர்களின் இயற்பெயர் கா.சி. கிருட்டினன். இவர் 9.5.1932 ஆம் ஆண்டு சின்னசாமி கவுண்டருக்கும் சின்னமுனியம் மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது துணைவியார் பெயர் சரஸ்வதி.
தகடூரான் அவர்கள் சிறந்த சீர்திருத்தச் சிந்தனை யாளர். இளம் வயதில் இருந்தே இளைஞர்களுக்கு விழிப்புணர்வளித்து வழிகாட்டினார்.
இடைநிலை ஆசிரியராகப் பணியேற்று இளங் கலை முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். முது கலைத் தமிழாசிரியராக ஓய்வு பெற்றார்.
ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி வகுப்புகள் நடத்தினார். ஏழை மாணவர்கள் படிப்பதற்கு உதவி செய்தார்.
தம் நண்பர்களோடு தருமபுரி விவேகானந்தா நகர மாளிகையில் திருக்குறள் வகுப்புகள், புற நானூற்றுச் சொற்பொழிவுகள் நடத்தினார்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.